Thursday, November 19, 2015

ஆடு, மாடு, கோழிக்கு மும்மடங்கு நிவாரணம்



காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில், மழை வெள்ளத்தில் கோழிகள் மற்றும் கால்நடைகளை இழந்தவர்களுக்கு, மூன்று மடங்கு நிவாரணத் தொகை கிடைக்க உள்ளது.
இது குறித்து, அரசு வட்டாரம் கூறியதாவது:வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட கடலுார் மாவட்டத்தில், 20 ஆயிரம் கோழிகள், 479 ஆடுகள், 138 கால்நடைகள், 273 கன்றுகள் உயிரிழந்துள்ளன. 
அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 21 கால்நடைகள், 59 ஆடுகள், 18,280 கோழிகள் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. 
வழக்கமாக புயல், வெள்ளத்தில் உயிரிழக்கும் மாடுகளுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய்; கன்றுக்கு, 5,000; ஆட்டுக்கு, 1,000; கோழிக்கு தலா, 30 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்படும். 
ஆனால் தற்போது, இழப்பீட்டுத் தொகை, மூன்று முதல் மூன்றரை மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே கடலுார், காஞ்சி மாவட்டங்களில், கால்நடைகளை இழந்தவர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்க உள்ளது. மாடு ஒன்றுக்கு, 30 ஆயிரம் ரூபாய்; கன்று, 16 ஆயிரம்; ஆடு, 3,000; கோழி, 100 ரூபாய் என, இழப்பீடுத் தொகை வழங்கப்பட உள்ளது. 
இவ்வாறு அரசு வட்டாரம் தெரிவித்தது. 



No comments:

Post a Comment