அரியலூர், : பருத்தி சாகுபடியில் சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு
ரூ.85.000 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது என குறைதீர் கூட்டத்தில்
தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கத்திட்டத்தில் இறவை
பருத்தி சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகள் சொட்டு நீர் பாசனம்
அமைத்திட ரூ.85 ஆயிரத்து 400 மானியமும் மற்றும் இதர விவசாயிகளுக்கு ரூ.64
ஆயிரத்து 50 மானியமும் ஒரு எக்டருக்கு வழங்கப்படும். மேலும் பருத்தி
சாகுபடி செய்துள்ள விவசாயிகள் உயிர் உரங்கள், களைக்கொல்லி, நுண்சத்து உரம்,
பயிர் பாதுகாப்பு பெறப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவை
உரிமம் பெற்ற தனியார் மற்றும் கூட்டுறவு கடன் சங்க விற்பனை மையங்களில்
பெற்று அதற்கான ரொக்க ரசீது, அடங்கல் மற்றும் குடும்ப அடையாள அட்டை
ஆகியவற்றுடன் அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில்
பதிவு செய்து, அதற்கான 50% மானியத் தொகையினை பின்னேற்பு மானியாக பெற்று
கொள்ளலாம். மேலும் விதைப்பு செய்த 70ம் நாள் நுனி கிள்ளுதல் பணியினை நிறைவு
செய்த விவசாயிகள் அதற்கான பின்னேற்பு மானியமாக எக்டருக்கு ரூ. 500 வீதம்
பெற்று கொள்ளவும். ரோட்டவேட்டர் என்கிற விசை உழுவை கருவி வாங்கிட சிறு,
குறு விவசாயிகளுக்கு ரூ.55 ஆயிரமும், இதர விவசாயிகளுக்கு ரூ.44 ஆயிரம்
பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்திற்காக அனைத்து
இனங்களுக்கும் ரூ.84.34 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது என்று
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அரியலூர்
கலெக்டர் தெரிவித்தார்.
கலெக்டர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment