Monday, November 2, 2015

விவசாயிகள் இனி அலைய வேண்டாம்! ஒரே இடத்தில் வேளாண் அலுவலகங்கள்



வேளாண் துறையின் அனைத்து அலுவலகங்களும், ஒரே இடத்தில் இருக்கும் வகையில், ஒவ்வொரு வட்டாரத்திலும், ஒருங்கிணைந்த அலுவலக கட்டடம் கட்டப்பட உள்ளது. 
வேளாண்துறையில் பல பிரிவுகள் உள்ளன. இவற்றுக்கு, மாநிலம் முழுவதும் வட்டார அளவில், தனித்தனி இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. இதனால், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், சாகுபடிக்கான உதவிகள் கிடைப்பதில்லை; தேவையற்ற அலைச்சல் ஏற்படுகிறது. 
அதனால், இந்த அலுவலகங்கள் எல்லாம் ஒரே இடத்தில் செயல்படும் வகையில், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைக்க, தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. இதற்காக, ஒவ்வொரு வட்டாரத்திலும், பொதுப்பணித் துறை மூலம், கட்டடங்கள் கட்டப்படும். முதல் கட்டமாக, நான்கு மாவட்டங்களில் உள்ள எட்டு இடங்களில், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடம் கட்டும் பணி துவங்க உள்ளது.


இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களில், வேளாண்துறை அலுவலகங்கள் மட்டுமின்றி, விவசாயிகளுக்கான கருத்தரங்க கூடம், விற்பனை கூடமும் அமைய உள்ளது. ஏழு மாதங்களில், இந்த கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும்; கட்டுமானப்பணி இந்த மாதம் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் --

வேளாண் துறையில் உள்ள பிரிவுகள்

வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை, தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, விதைசான்று மற்றும் அங்கக சான்று, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1378283

No comments:

Post a Comment