Sunday, November 22, 2015

கால்நடை பல்கலை.யில் புதிய தொழில்நுட்ப மையம் தொடக்கம்


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையத்தில் புதிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப மையம் அண்மையில் தொடங்கப்பட்டது.
 நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சு.திலகர் மையத்தைத் திறந்து வைத்தார். மேலும், பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 20 சாதனங்களை அறிமுகப்படுத்தினார்.
 20 சாதனங்கள்: நடமாடும் மருத்துவ வண்டி, பன்முகப் பயன்பாட்டுக்கான இருசக்கர பண்ணை வண்டி, கால்நடைகளுக்கான குளிர்சாதன மின்விசிறி, நகரும் பாசனப் பன்முனை நீர்த்தெளிப்பான், ஆடுகளுக்கான, நகரும் உண்ணிகள் நீக்க குளியல் தொட்டி, பிறந்த ஆட்டுக் குட்டிகளுக்கான குளிர்தடுப்பான் கூண்டு, பன்றிகளுக்கான வெப்பமூட்டும் கருவி- குட்டி ஈனும் தண்டவாளக் கொட்டில், வெள்ளாடுகளுக்கான தீவனச் சட்டம், உலர்தீவனம் நறுக்கும் கருவி, வெண்பன்றிகளுக்கான பச்சைகுத்தும் கருவி, சாண வரட்டி தயாரிக்கும் கருவி, பல அடுக்குகள் கொண்ட பிளாஸ்டிக் முயல் கூண்டு, மற்றொரு வகையான பிளாஸ்டிக் முயல் கூண்டு, கொட்டில் முறையில் ஆடு வளர்ப்புக்கு உருவாக்கப்பட்ட சிறிய வகைக் கூண்டு ஆகிய 20 சாதனங்கள் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டன.
 பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் இணைந்து இந்தக் கருவிகளை உருவாக்கியுள்ளனர்.
 இது குறித்து டாக்டர் சு.திலகர் கூறுகையில், கால்நடை வளர்ப்பு, தீவனப் பயிர் வளர்ப்பு, இறைச்சிக் கோழி வளர்ப்பு, வெண்பன்றி வளர்ப்பு போன்ற கால்நடை சார்ந்த தொழில் வளர்ச்சிக்கும், அதன் அன்றாடப் பணிகளை விரைவாகச் செய்வதற்கும் ஏற்ற எளிய அறிவியல் சாதனங்கள் கண்டுபிடிக்கப்படுவது ஆரோக்கியமான காரியம் ஆகும் என்றார்.

No comments:

Post a Comment