Friday, November 20, 2015

நவ. 26-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவ. 26-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது என்று ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தொடர்புடைய அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றகவுள்ளனர். எனவே, முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று, நிறை குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.

No comments:

Post a Comment