உலகின்
ஆரோக்கியமான நாடு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா 103-வது இடத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளது.
ஐ.நா. சபை, உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து ‘புளூம்பர்க் ரேங்கிங்’ அமைப்பு உலகின் சுகாதாரமான நாடுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
மக்களின்
வாழ்க்கைத் தரம், சத்தான உணவு வகைகள், ஆயுட்காலம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஆய்வறிக்கை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மொத்தம் 145 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
அதில்
சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. இத்தாலி, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ஜப்பான், ஸ்பெயின், நெதர்லாந்து, சுவீடன், ஜெர்மனி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அமெரிக்கா 21-வது இடத்திலும் பிரிட்டன் 21-வது இடத்திலும் ரஷ்யா 97-வது இடத்திலும் உள்ளன.
அண்டை
நாடுகளான சீனா -55, இலங்கை -56, பாகிஸ்தான் 100-வது இடத்தில் உள்ளன. இந்தியா 103-வது இடத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளது.
No comments:
Post a Comment