Friday, July 29, 2016

லாபம் தரும் பரண்மேல் ஆடுகள் வளர்ப்பு முறை



நமது நாட்டில் ஆடுகள் பெரும்பாலும் பாரம்பரிய முறைகளிலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆடுகளை விவசாய நிலங்களில் பட்டி போட்டு அடைத்தோ, மரநிழல்களில் அல்லது வீட்டை ஒட்டிய சிறு தடுப்புகளில் அடைத்தோ வளர்த்து வருகின்றனர். குறைந்து வரும் மேய்ச்சல் நிலங்கள், வனப்பகுதியில் ஆடுகளை அனுமதிக்காமல் இருப்பது போன்ற தற்போதைய சூழ்நிலையில் ஆடுகளை கொட்டகை அமைத்து பரண்மேல் வளர்ப்பதே சிறந்தது என தேனி உழவர் பயிற்சி மைய பேராசிரியர் அ.செந்தில்குமார் தெரிவித்தார்.
அவர் கூறியது: கனமழை, அதிக வெயில், குளிர்காற்று, பனி, கொடிய விலங்குகள் மற்றும் திருட்டு ஆகியவற்றில் இருந்து வெள்ளாடுகளைப் பாதுகாக்கவும், சிறந்த முறையில் வெள்ளாடுகளை வளர்க்கவும் கொட்டகை அமைப்பது மிக அவசியம். கொட்டகைகளை மேட்டுப்பாங்கான இடத்தில் அமைக்க வேண்டும். கொட்டகை சுத்தமாகவும், காற்றோட்டம், வெளிச்சத்துடனும் இருக்க வேண்டும். கொட்டகையின் கூரையை பனை அல்லது தென்னை ஓலை கொண்டு அமைக்கலாம். அஸ்பெஸ்டாஸ் கொண்டும் கூரையை அமைக்கலாம். கொட்டகையின் நீளப்பகுதி கிழக்கு மேற்காகவும், அகலப் பகுதி வடக்கு தெற்காகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் கொட்டகையினுள் நல்ல காற்றோட்டமும், குறைவான சூரிய வெப்பத்தையும் பெறலாம்.
கொட்டகை அமைப்பு: கொட்டகையின் கூரையை அஸ்பெஸ்டாஸ் கூரை கொண்டு அமைத்தால் உயரம் 10-12 அடி உள்ளவாறு அமைக்க வேண்டும். பிற பொருள்களைக் கொண்டு கூரை அமைத்தால், உயரம் 8-10 அடி உள்ளவாறு அமைக்க வேண்டும். கொட்டகையைச் சுற்றி 1 அடி உயரத்தில் சுவர் அமைத்து, அதன் மீது 5 அடி உயரத்திற்கு கம்பி வலை அல்லது மூங்கில் தட்டிகள் அல்லது மரச்சட்டத்தினால் ஆன தட்டிகளை அமைக்கலாம். கொட்டகையின் அளவு, அதில் அடைக்கக் கூடிய ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமையும். ஒரு வளர்ந்த வெள்ளாட்டிற்கு ஏறத்தாழ 12-15 சதுர அடி இடவசதி தேவை. எனவே, 50 ஆடுகளுக்கு கொட்டகை அமைப்பதாக இருந்தால் 600 சதுர அடி இடவசதி அவசியம். கொட்டகையின் நீளம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அகலம் 20 அடிக்கு குறைவாக இருக்க வேண்டும்.
ஆடுகளை இரவில் மட்டும் கொட்டகையில் அடைத்து பகலில் மேய்ச்சலுக்கு அனுப்புவதாக இருந்தால், மேற்கண்ட 600 சதுர அடி இடவசதி போதுமானது. ஆனால் ஆடுகள் நாள் முழுவதும் கொட்டகையில் இருக்கும் "கொட்டில்" முறையில் வளர்ப்பதாக இருப்பின் அதே அளவு இடவசதி கொட்டகையை ஒட்டிய திறந்த வெளி பகுதியில் கொடுக்கப்பட வேண்டும். இது ஆடுகள் சுதந்திரமாக நடமாடவும், கொட்டகையில் சாணம் மற்றும் சிறுநீர் அதிகம் சேராமலிருக்கவும் தேவைப்படுகிறது.
கொட்டகையின் நீளத்தை ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதிக பட்சம் 100 ஆடுகள் வரை ஒரு கொட்டகையில் அடைக்கலாம். அதிலும் குட்டிகள், கிடாக்கள் இவற்றிற்கு தனித்தனி தடுப்புகள் அமைப்பது சிறந்தது. கொட்டகையின் அகலம் நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப 20 அடிக்கு குறைவாக இருப்பதே நல்லது. அதற்கு மேல் அதிகரிக்கும் போது காற்றோட்டம் பாதிக்கப்பட்டு கொட்டகையில் அம்மோனியா வாயுவின் தாக்கம் காணப்படும். இது போலவே கொட்டகையின் உயரம் முக்கியமானது. கொட்டகையின் கூரை அஸ்பெஸ்டாஸ், மங்களூர் ஓடு அல்லது கீற்றுகளைக் கொண்டு அமைக்கலாம். கீற்றுக் கொட்டகை அமைத்தல் செலவினைக் குறைத்தாலும் தீப்பிடிக்கும் அபாயம், பூச்சிகளின் தொல்லை, அடிக்கடி மாற்ற வேண்டிய சிரமம் போன்ற சில பாதகமான விளைவுகளைத் தரும். அஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பது கொஞ்சம் செலவு அதிகம் என்றாலும் நிரந்தரமான ஒன்று. துத்தநாகத் தகடு (தகரம்) கொண்டும் கூரை அமைக்கலாம்.
சல்லடைத் தரை அல்லது பரண்மேல் ஆடு வளர்ப்பு:
உயர் ரக ஆடுகளை வைத்திருப்போர் சல்லடைத்தரை அமைப்பு முறையிலும் தரையை அமைக்கலாம். இதில் தரையிலிருந்து சுமார் 3 முதல் 4 அடி உயரத்தில் 1 முதல் 2 அடி அங்குல அகலம் கொண்ட மரச்சட்டங்களை 1 அங்குல இடைவெளி விட்டு வரிசையாக அடிக்கப்பட்டு அதன் மேல் ஆடுகள் விடப்படும். ஆடுகளின் சாணம் தரையில் தங்காமல் இடைவெளிகள் வழியாக கீழே விழ வேண்டும். இவ்வாறு அமைப்பதால் ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் கீழே விழுந்து விடும். இதன் மூலம் ஆடுகள் நோய் பாதிப்பின்றி சுகாதாரமாக இருக்க வழி வகுக்கும். இம்முறையில் கொட்டகையினை பராமரித்தால் ஆடுகள் சுகாதாரமாகவும், அதிக எடையுடனும் காணப்படும். இம் முறையில் கொட்டகையை தினமும் சுத்தம் செய்ய அவசியம் இல்லை. சாணம் ஓரளவு சேர்ந்த பிறகு அகற்றினால் போதும்.
இடவசதி: குட்டிகளுக்கு 4 சதுர அடியும், பெட்டை ஆடுகளுக்கு 10 முதல் 15 சதுர அடியும் மற்றும் கிடாக்களுக்கு 15முதல் 20 சதுர அடியும் இடவசதி கொடுக்க வேண்டும். அதிக அளவில் ஆடுகளை ஒரே கொட்டகையில் அடைத்தால் ஒன்றோடொன்று சண்டையிட்டு காயங்களையும், கருச்சிதைவையும் உண்டாக்கும். மேலும், நோய்த்தாக்கமும் அதிகமாக இருக்கும். கொட்டகையில் கிடாக்கள், சினை ஆடுகள், குட்டிகள், தாய் ஆடுகளை தனித் தனியாகப் பிரித்து அடைக்க வேண்டும். எனவே, கொட்டகையில் கம்பி வலை கொண்டோ அல்லது மூங்கில் தட்டிகள் கொண்டோ சிறு சிறு அறைகளாக பிரித்து அதில் ஆடுகளை வைத்து வளர்த்தல் நல்லது.
தண்ணீர் தொட்டி மற்றும் தீவனத் தொட்டியின் அமைப்பு :
 ஆடுகள் நீர் பருகுவதற்கு வட்ட வடிவிலான அல்லது நீள் செவ்வக வடிவிலான சிமெண்ட் தொட்டிகள் இருப்பது சிறந்தது. இவற்றை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை உள்பக்கம் சுண்ணாம்பு அடிக்க வேண்டும். ஏறத்தாழ 20 ஆடுகளுக்கு ஒரு தொட்டி தேவை. இரும்புத்தகடு அல்லது மரத்தினால் ஆன தீவனத் தொட்டிகளை அரை வட்ட வடிவில் அமைக்க வேண்டும். இதன் நீளம் 5 முதல் 6 அடி இருக்கலாம். 10 முதல் 12 ஆடுகளுக்கு ஒரு தீவனத் தொட்டி தேவை.
தீவனத் தொட்டியை ஆடுகள் அசுத்தம் செய்வதை தடுக்க தலையை மட்டும் நுழைக்கும் அளவிற்கு கம்பித் தடுப்புகள் அமைக்கலாம். இவற்றை அடர் தீவனம் மற்றும் வெட்டப்பட்ட பசுந்தீவனங்கள் அளிப்பதற்கு பயன்படுத்தலாம்.
கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பின் பயன்கள்:
வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு எடுத்துச் செல்வதனால் அதன் சக்தி விரயமாவதோடு அதன் உடல் எடை குறையும். ஆடுகளுக்குத் தேவையான பசுந்தீவனங்களை உற்பத்தி செய்து கொட்டகையிலேயே ஆடுகளை வைத்து கொடுக்கும் போது அதன் உடல் எடை வெகுவிரைவில் கூடுவதால் அதிக இலாபத்திற்கு ஆடுகளை விற்கலாம். ஆடுகளை 12 மாதங்கள் வரை காத்திருக்காமல் 6 முதல் 8 ஆவது மாதங்களிலேயே விற்பனை செய்யலாம். அதிக எடையுடைய குட்டிகளைப் பெறலாம். நோய் பாதிப்பு அதிகம் இருக்காது. குட்டிகளின் இறப்பைக் குறைக்கலாம்.பராமரிப்பு எளிது. அறிவியல் முறையில் பராமரிக்கவும், தீவனம் அளிக்கவும், நோய் தடுப்பு முறைகளை மேற்கொள்ளவும் எளிதாகிறது. குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஆடுகளை வளர்க்க முடியும்.எரு சேமிக்கப்பட்டு நிலத்திற்கு உரமாகக் கிடைக்கின்றது என்றார்.
Source : Dinamani

Insurance scheme for cattle breeders to be launched today


The Haryana government will launch on Friday an insurance scheme, ‘Jokhim Prabandhan Aur Pashudhan Bima Yojana’, for the cattle breeders.
Haryana Agriculture Minister O. P. Dhankar on Thursday said under the scheme insurance cover would be provided for cows, bulls, buffaloes and camel at a premium of Rs 100 and for sheep, goats, pigs at Rs 25 for a period of three years.
The insurance companies would give compensation in case of death of animal.
The scheme is free of cost for cattle breeders belonging to the Scheduled Castes.
He also accused the opposition parties of misleading people regarding the ‘Pradhan Mantri Fasal Bima Yojana’, saying when the State government introduced the scheme, the opposition was busy making statements regarding insurance companies which everyone knows that they provide every type of insurance cover. 

Source : The Hindu 

TNAU taps solar energy

Aims at motivating farmers to take to non-conventional energy

SUCCESS:Solar power panels set up at the TNAU-Agricultural Engineering College and Research Institute, near Tiruchi, has been paying dividends.— Photo: A.Muralitharan 
 
SUCCESS:Solar power panels set up at the TNAU-Agricultural Engineering College and Research Institute, near Tiruchi, has been paying dividends.— Photo: A.Muralitharan
The Tamil Nadu Agricultural University – Agricultural Engineering College and Research Institute at Kumulur near here, has successfully tapped solar energy by generating 572 Watts at its Renewable Energy Park. A total of eight panels have been set up at the park with a capacity of 74 Watts each and the power generated is being utilised for pumping water using mini pump.
The panels just need periodical maintenance and upkeep for its efficiency, said K. Ramaswamy, Dean of the Institute. He said that the panel has been set up with a view to motivating farmers to take to non-conventional energy technique for deriving maximum advantage.
“We have planned to expose the farmers to these non-conventional gadgets,” he said.
This apart, the Institute has taken up a series of experiment in tapping solar energy for street lights. “We have set up 20 solar panels for 20 street lights within the campus,” he added.
Mr. Ramaswamy also said that the Institute accounted for a large number of cattle and a biogas plant has been set up using cow dung. “The fuel energy needed for the canteen is got from biogas,” he said.
The Institute has also taken up research on solar powered device to keep birds away from crops. Whenever a bird comes near the field, the solar panel emits a sound emitted from a pen-drive. “Farmers often complain about the extensive damage to the produce, particularly on the eve of harvest. The device will help keep away birds,” he said.
He said scientists of the Institute have been organising a series of awareness programmes to benefit farmers to utilise the non-conventional energy.
The solar panel was set up as part of ‘students experience programme’ in co-ordination with John Gunasekaran, a faculty member.
 
 
Source : The Hindu 

Treading the organic path

SharOrganic farmer, environmental activist and social commentator Elango Kallanai redefines the relationship between a peasant and his land
SON OF THE SOILOrganic farmer Elango KallanaiPhoto: R. Ashok
 
 
When Elango Kallanai proposed his plan to take up organic farming in his native village Narasingampatti six years ago, there was none to encourage his venture. Instead, his fellow farmers branded him crazy and brushed aside his suggestions. Today he is a trendsetter and every farmer in and outside his village looks up to him for viable farm practices.
A research scholar in English, Elango left a lucrative career in IT to turn organic farmer. On 10 acres, he independently developed a profitable organic farming system. “I never romanticised farming. When I took it up, I was aware about the lack of water sources. As a child I had seen 24 water bodies in and around my village but now there are only six. You don’t need an expert to tell the reason.”
In the initial days, his land was in very bad shape. To enrich the soil he did summer ploughing, sowed greens, re-ploughed and closed it. Then, he planted navadanya grains. It took about five to six months and that was the time power cuts were rampant and he could do nothing for the next 18 months. Everybody in the village commented that he was unfit for agriculture.
“But I studied a lot about the market for organic farm produces,” he says.
After the lull, he started with banana plantation. The yield was very low in the first two years. “I was clear I was not producing for the big markets but for the consumers. If you go to open market, they will kill you and decimate your organic interest. So I sent packs of 50 kgs and 100 kgs to my customers in Kochi, Rameswaram and Bangalore charging only retailers’ price and not the organic cost.”
Elango tasted success with the native banana varieties such as Rastali , Naattu Rastali , Naattu pazham , Karpoora Valli and Naattu Poovan and gradually overcame one constraint after the other. In the meantime, he also developed interest in sowing native paddy varieties. “Only when I went in search of native paddy varieties, I came to understand how difficult it was. I had been to several farm festivals in places including Maharashtra, Punjab and Rajasthan and returned impressed. I was thrilled to see Chattisgarh and Orissa preserve native paddy varieties. In Chattisgarh, you can find best rice being served in a roadside eatery. I played it safe and selected Mappillai Samba as its yield is not dictated by external factors,” he says.
But when it comes to organic products, price factor keeps people away. “It is justified. Being price conscious is not crime but at what cost. It is the price one has to pay for drifting away from traditional practices. One kg of organically grown Karuppu Kavuni rice is selling at Rs.200. The price is because of its exclusive nature. Demand is also more. But are we paying reasonable price for the effort put in by a farmer?” he asks.
He sees organic farming as a continuous process. “I have achieved 85 per cent of my target. Now I do nothing on enriching the soil, instead concentrate only on the crop. All my nutrients are directed towards the plant. I try to make farmers self-reliant. But most of them depend on bankers, shopkeepers selling fertilisers and machine makers. You should be in better position to understand your farm and should not allow any other to dictate terms. Once you depend on others, you lose the connection with your land,” he says.
Elango is also a television personality and regularly figures in a talk show for a popular satellite channel. His knowledge on varied subjects from farming and anthropology to Siddha medicine and education has made him a sought after speaker.
He regularly writes for Tamil literary magazine Tamizhini and is at present writing a novel on feminism, which he has planned to release next year. “Even today people ask me why I left the city to settle down in village. Rather getting stuck in a city and being nobody, I preferred to go back to the village and be somebody,” he laughs.

Source : The Hindu 

Organic farming, a viable opportunity for farmers of Kandi region: PAU experts


Representative image 
 
LUDHIANA: The Punjab Agricultural University organized a one-day seminar on "Organic Farming: Opportunities and Constraints in Kandi Region of Punjab" at the Regional Research Station, Ballowal Saunkhri, district Shaheed Bhagat Singh Nagar. The scientists from PAU, Ludhiana; Krishi Vigyan Kendras (KVKs) of Kandi region, officers from allied departments and progressive farmers from Kandi area participated in the seminar.

In his address, Manmohanjit Singh, Director, Regional Research Station (RRS), Ballowal Saunkhri emphasized that Kandi area has a large potential for the organic farming. The fertilizer consumption per hectare is very low as compared to rest of the state, he observed. Further, he said that the government of India, under "Parampragat Kheti" scheme, is going to enhance the area under organic farming to 5 lakh acres in the next three years. However, in Punjab, the area under organic farming is only about 2000 acres, he disclosed. Singh urged the farmers to promote organic farming for higher benefits and to conserve natural resources. He also informed the delegates about various initiatives, taken by the RRS, for the benefit of the farming community in the Kandi region.

S.S. Walia, Senior Agronomist, PAU, discussed various aspects of organic farming and recommendations of PAU for production of quality organic produce.

K.S. Sanga, Senior Entomologist, PAU, highlighted the role of beneficial insects in agriculture. He also urged the farmers to avoid using chemicals and instead promote use of bio control agents in agriculture.


Source :  Times of India

Change in vegetable auction day, time

 
The day and time of vegetable auction at the Maradu market is being changed from August 4. The market, under the Department of Agriculture, will now see auction on all Thursdays from 7 a.m. Over the last five years, vegetable auction has been taking place from 8 a.m. on Wednesdays. – Special Correspondent


Source : The Hindu 

Implement research done, says Tanuvas official

In a bid to give a push to the extension activities at Sri Venkateswara Veterinary University (SVVU), which according to the officials has been struggling without a centralised extension system and decentralised dissemination pattern, a State-level workshop on ‘Redefining the extension action policy of university’ was held at the varsity premises here on Tuesday.
Stress on roadmap
N.K. Sudeep Kumar, Director of Extension, Tamil Nadu Veterinary and Animal Sciences University (Tanuvas), who presided over the inaugural ceremony, stressed on the need for identifying the prevailing weaknesses in the system and evolve a concrete roadmap to address the needs of livestock farmers.
“Emphasis should be laid on implementing the research done in the institutions, breaking free from the publicity. Those associated with extension activities should spend more time in the field, instead of the cosy office rooms, and gather the existing issues. They should in turn extract the outcomes and go ahead with the solution,” he remarked.
Dr. Kumar further urged the policy makers to give a structured framework for extension activities, with sufficient, but dedicated, human resources and budget. “Validation of research output from Krishi Vigyan Kendras (KVKs), varsities and other organisations should be channelised, including the economic feasibility, before delivering it to the livestock farmers,” he added.

Source : The Hindu 

Thursday, July 28, 2016

ஈரல் காக்கும் பாகல்



பார்த்ததேது பார்த்திடில் பார்வையூ டழிந்திடும்
கூத்தாய் இருப்பிரேல் குறிப்பில் அச்-சிவம்அதாம்
பார்த்தபார்த்த போதெல்லாம் பார்வையும் இகந்துநீர்
பூத்தபூத்த காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே


பாகல் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது அதன் கசப்பு சுவை தான். தற்காலத்தில் சர்க்கரை குறைப்பாட்டால் துன்பப்படுவோர்கள் பச்சையாக அரைத்து முகம் சுளிக்க குடிக்க உதவும் பாகற்காய் நமது முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகளில் ஒன்றானது என்பதை அறிந்தவர்கள் ஒருசிலரே.

காயை சமையல் செய்து வற்றலாக்கி வறுத்து உணவுடன் சாப்பிடுவதும் நமது வழக்கம்

சுட்டிலைகளை கொண்ட கொடி வகையை சேர்ந்தது பாகல். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்துடனும், காய்கள் நீண்டும் உருண்டையாகவும் சொரசொரப்பாகவும் அமைந்திருக்கும். பார்ப்பதற்கு அதன் மேல் முட்கள் அமைந்திருப்பது போல் இருக்கும். நிலப்பாகல், மிதிப்பாகல், நரிப்பாகல், நாய்ப்பாகல், கொம்புப்பாகல், வேலிப்பாகல் காட்டுப்பாகல் என பலவகையுண்டு. வேலிப்பாகல், நரிப்பாகல், நாய்ப்பாகல் இம்மூன்றும் குத்துகாடுகளிலும் வேலிகளிலும் படர்ந்து வளரும்.

இவைகளின் காய் சிறியதாகவும் அதிக கைப்புள்ளதாகவும் இருக்கும். நிலப்பாகல், மிதிப்பாகல் இவ்விரண்டும் மிகப்பெரிதும் மிகச்சிறிதுமில்லாமல் நடுத்தரமாய் தரையில் படர்ந்து வளரும். காய்கள் ஏராளமாய் காய்க்கும். இந்த இனங்களை சமையல் செய்து உண்பது வழக்கமாக உள்ளது. பொதுவாக பாகல் முக்குற்றங்களால் ஏற்படும் பெருக்கை அடக்கும். கழிச்சல் உண்டாகும் வயிற்றில் உள்ள புழுக்களை வெளியாக்கும். ஈரல்நோய், வாதநோய், உள்ளவர்கள் பழத்தை சமைத்து சாப்பிட தீரும். முழுப்பயனும் பெறுவதற்கு மற்ற பழங்களை சாப்பிடுவது போல் சாப்பிடவேண்டும். இதனால் களைப்பு நீங்கி ஆயாசமும் தீரும்.

சிலருக்கு மாலை நேரம் சூரியன் மறைந்தவுடன் பார்வை மங்கி எதுவும் தெரியாது. மீண்டும் காலையில் சூரியன் உதயம் ஏற்பட்டவுடன் தான் பார்வை தெரியும். இதை மாலைக்கண் நோய் என்பார்கள். இவர்கள் பாகல் இலைச்சாற்றுடன் சிறிது அளவு மிளகை சேர்தரைத்துக் கண்ணைச்சுற்றி பற்றிட மாலைக்கண் குறைபாடு படிப்படியாக நீங்கும். காலையில் வெறும் வயிற்றில் இலைச்சாற்றை 30மிலி அளவில் குடித்துவர வயிற்றுபூச்சி கழிந்து வெளியேறும்.

பாகல் இலைச்சாறு, ஆனைபுளிச்சாறு, பழுத்த வெற்றிலைச்சாறு, நாவல்பட்டைச்சாறு ஆகியவற்றை ஒரெடையாக எடுத்து அதில் சிறிதளவு வசம்பு உரைத்து 7நாட்கள் குழந்தைகளுக்கு கொடுத்தால் கல்லீரல், மண்ணீரல் கட்டிகள் கரைந்து போகும். பாகல் வற்றலை வறுத்து சாப்பிட மூலம் காமாலை நீங்கும். இதை உண்ணும் காலத்தில் அசைவ உணவை முற்றிலும் விலக்கவேண்டும்.

இலைச்சாற்றை வாரம் ஒருமுறை 100மிலி குடித்து வந்தால் சிறுநீர் சர்க்கரையின் அளவு குறையும். சிலருக்கு உள்ளங்கால்களில் காலையில் எப்பொழுதும் எரிச்சல் இருக்கும். இதை செய்வினை கோளாறு என நினைத்து மாந்தீரிகத்தை நாடுவார்கள். இவர்கள் பாகல் இலைச்சாற்றை பிழிந்து இரவு படுக்கப்போகும்போது உள்ளங்கால்களில் தடவி வர எரிச்சல் நீங்கும்.

மிதிப்பாகல் பழச்சாறு, நாவல்பட்டைச்சாறு சடஅளவு எடுத்து காலை வேளையில் 30மிலி வீதம் 40முதல் 120 நாட்கள் வரை குடித்து வந்தால் மதுமோகம் முற்றிலும் தீரும். இதை குடிக்கும் காலத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது. பாகல் இலையை உலர்த்தி பொடித்து பெருநோய்களின் புண் மீது தூவிவர நோய் குறையும், புண்கள் ஆறும். குட்டநோய் உள்ளவர்கள் தானாக பழுத்த பழத்தை காலை வேளையில் சமைக்காமல் சாப்பிட குட்ட நோய் தீரும். ஆனால் தொடர் மருந்துண்பவர்கள் கொம்பு பாகற்காயை சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் மருந்துகளை முறிக்கும். உடலில் கரப்பான் உண்டாகும். இதைதான்

சுரமேகங் காசஞ்சு வாசமொடு மூலத்
திரிதோடங் குட்டமிவை தீருங் கிருமியறும்
மோகப் புணரியெனு மொய்குழலே வெம்பிவிழாப்
பாகற் பழத்தையுண்டு பார்.


என்கிறார் அகத்தியர்பெருமாள். உணவாகும் பாகற்காயை மருந்து என்பதையறிந்து வாழும் வாழ்க்கை நலமுடன் வாழ நமக்களித்த முன்னோர்கள் வழியில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம். 

Source : Dinakaran

நரம்புகளை பலப்படுத்தும் பிரண்டை



முதுமை காரணமாக எலும்பு தேய்மானம், நரம்புகள் பலவீனம், ரத்த ஓட்டத்தில் கோளாறு, நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். வெற்றிலையை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் வேற்றிலை சாறுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை என ஒரு வாரம் குடித்து வந்தால் நரம்புகள் பலப்படும். சர்க்கரை நோயாளிகள் தேனுக்கு பதில் மிளகு சேர்க்கவும்.

நரம்பு பலவீனத்துக்கு வெற்றிலை மருந்தாகிறது. வெற்றிலை காரம், மணத்தை உடையது. செரிமான கோளாறை போக்கும். ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை  சரிசெய்யும். வயதானவர்களுக்கு நல்ல பலத்தை தரக்கூடியதாகிறது. பிரண்டையை பயன்படுத்தி வயதானவர்களுக்கு நரம்பு, தசையை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

பிரண்டை கொடியை எரித்து சாம்பலாக்கி கால் ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் சாதிக்காய் பொடி சேர்க்கவும். அரை ஸ்பூன் நெய் சேர்த்து கலக்கி இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டுவர நரம்பு, தசை பலப்படும். நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் தினமும் இதை எடுத்துக்கொள்ளலாம். பிரண்டை எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. வயதானவர்களுக்கு ஏற்படும் கை, கால் குடைச்சல், எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

கால் ஸ்பூன் வசம்பு பொடி எடுக்கவும். இதில், 2 ஏலக்காய் தட்டி போடவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர கை, கால் குடைச்சல், எரிச்சல் குணமாகும். வசம்பு நரம்புகளுக்கு பலம் தரக்கூடியது. அரை ஸ்பூன் பூனைகாலி விதை பொடி, அரை ஸ்பூன் அமுக்குரா சூரணம், சிறிது பனங்கற்கண்டு, காய்ச்சிய பால் சேர்த்து கலந்து இரவு நேரத்தில் குடித்துவர நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு குறையும்.

கை, கால்களில் ஏற்படும் நடுக்கம் குறையும். பக்கவாதத்துக்கு மருந்தாக அமைகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பூனைக்காலி விதை, அமுக்குரா சூரணம் உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. வறட்டு இருமலுக்கான மருத்துவத்தை பார்க்கலாம். சுக்கு, ஏலக்காயை பொடியாக்கி கால் ஸ்பூன் எடுத்து தேனுடன் கலந்து காலை, மாலை சாப்பிட்டுவர வறட்டு இருமல் சரியாகும். 

Source : Dinakaran

கண் எரிச்சலை போக்கும் கொத்தமல்லி



வெப்பத்தால் கண் எரிச்சல், கண்களில் சிவப்பு தன்மை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இதை முள்ளங்கி, தக்காளி, வெள்ளரி, கொத்தமல்லி போன்றவற்றை பயன்படுத்தி சரிசெய்யும் மருத்துவத்தை காணலாம். முள்ளங்கியை பயன்படுத்தி கண் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: முள்ளங்கி, தக்காளி, வெள்ளரி, சீரகப்பொடி, உப்பு. கால் டம்ளர் முள்ளங்கி சாறு, சம அளவு தக்காளி சாறு மற்றும் வெள்ளரி சாறுடன் கால் ஸ்பூன் சீரகப் பொடி, சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து வாரம் இருமுறை குடித்து வந்தால் கண் எரிச்சல், கண்ணில் ஏற்படும் சிவப்பு தன்மை, சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சி குணமாகும். உடல் குளிர்ச்சி அடையும்.

நந்தியா வட்டை பூக்களை பயன்படுத்தி கண் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.  நந்தியா வட்டை பூக்களை இரவு நேரத்தில் தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் கண் எரிச்சல் சரியாகும். பூக்களை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் கட்டி வைத்தால், கண் சோர்வு, கண் எரிச்சல் குணமாகும். வெயிலில் செல்லும்போது கண்கள் சிவந்து போகும்.

இந்நிலையில், நந்தியா வட்டை பூக்கள் உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைப்பதால் கண் பிரச்னைகள் சரியாகும். கண்களில் அழுக்கு படிதலை தடுப்பதுடன், கண்களுக்கு ஆரோக்கியம் தரும். பார்வையை தெளிவுபடுத்தும். திரிபலா சூரணத்தை பயன்படுத்தி கண் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் திரிபலா சூரணத்தில் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை நன்றாக ஆற வைத்து, 2 முறை வடிக்கட்டி எடுத்து கொள்ளவும். இந்த நீரை கொண்டு கண்கள், புண்கள், கொப்புளங்களை கழுவுவதால் அவைகள் வெகு விரைவாக ஆறும்.

கொத்தமல்லி இலைகளை சுத்தப்படுத்தி அரைத்து சாறு எடுக்கவும். மெல்லிய துணியில் இந்த சாறை நனைத்து கண்களுக்கு மேல் ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது கண்கள் மீது 15 நிமிடங்கள் வைத்திருந்தால் கண் எரிச்சல் சரியாகும். இதேபோன்று, வில்வ இலை சாறு எடுத்து கண்களில் வைத்தால் கண் எரிச்சல் குணமாகும்.

வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், புறவூதா கதிர்கள் அதிகளவில் தாக்குவதால் கண்கள் பாதிக்கும். கண்களில் சிவப்பு தன்மை, கண் எரிச்சல், கிருமிகள் தொற்று போன்றவை நிகழும். இந்நிலையில் கொத்தமல்லி, வில்வ இலை சாறு மருந்தாகிறது. இதுபோன்ற எளிய மருத்துவத்தை பயன்படுத்துவதன் மூலம் கண்களை நாம் பாதுகாக்கலாம்.

Source : Dinakaran

நகத்துக்கு ஆரோக்கியம் தரும் சீமை அகத்தி



நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், நகத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பது குறித்து பார்க்கலாம். நகம் சுத்தமாக இருக்கும்போது அகம் சுத்தமாக இருக்கும். தற்போது ஆண், பெண் இருபாலருக்கும் கை நகங்களில் சொத்தை ஏற்படுகிறது. இது பெரும் பிரச்னையாக உள்ளது.  நகங்கள் ஆரோக்கியமாக இருக்க மேல்பூச்சு மருந்துகள் மட்டும் போதாது. கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் ஏ சத்துக்களை கொண்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது. முள்ளங்கி, முட்டைகோஸ் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.

கீரைகள் அதிகமாக சாப்பிட்டால் நகங்கள் ஆரோக்கிமாக இருக்கும். சீமை அகத்தியை பயன்படுத்தி நகச்சுற்றுக்கு மருந்து தயாரிக்கலாம். தோட்டம், சாலையோரங்களில் சீமை அகத்தி அதிகளவில் காணப்படும். அகத்தி கீரையை போன்ற இலைகளை கொண்டது. இந்த சீசனில் சீமை அகத்தி பூக்கள் தாராளமாக கிடைக்கும் என்பதால் அதன் பூக்கள் பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் சீமை அகத்தி இலைகளை அரைத்து பயன்படுத்தலாம்.

பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன், சீமை அகத்தி பூக்களை சேர்க்கவும். தைலப்பதத்தில் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி எடுக்கவும். இதை நகத்தில் வைத்தால் நகச்சுற்று சரியாகும். சீமை அகத்தியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. தோல் நோய்க்கு மருந்தாகிறது. நகம் ஆரோக்கியம் பெறும். சீதாபழ இலையை பயன்படுத்தி நகத்தில் ஏற்படும் சொத்தைக்கான மருந்து தயாரிக்கலாம். பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் சீதாபழ இலை பசை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து காய்ச்சவும். ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைக்கவும்.

நகங்களில் போட்டுவர நகங்களில் ஏற்படும் சொத்தை, வெடிப்பு குணமாகும். பூஞ்சைகாளான் தொற்று சரியாகும். தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. சீதா பழத்தின் செடி நோய் எதிர்ப்பு சக்தி உடையது. சிறுதானியங்களை சாப்பிட்டு வந்தால் நகம் பலமாக இருக்கும். நகம் அழகாக வளரும். உடலில் ஏற்படும் கட்டிகள் எளிதில் பழுத்து உடைவதற்கான மருத்துவத்தை காணலாம். முன்னோர்கள் சாதாரண கட்டிகளை மேல்பூச்சு மருந்துகள் மூலம் குணமாக்கினர். சுண்ணாம்புடன் தேன், மஞ்சளை குலைத்து கட்டிகளின் மேல் பூசி, ஓரிரு நாட்கள் வைத்திருப்பதன் மூலம் உள்ளிருக்கும் நச்சுக்கள் வெளியேறி கட்டிகள் விரைவில் குணமாகும். 

Source : Dinakaran

சிறுநீர்பை கோளாறுகளை போக்கும் நெறிஞ்சில்


3
புரோஸ்டெட் சுரப்பியில் ஏற்படும் வீக்கத்தை போக்க சிறுநெறிஞ்சில் மருந்தாகிறது. இந்த சீசனில் தாராளமாக கிடைக்கும் சிறுநெறிஞ்சில் பூக்கள், மஞ்சள் நிறத்தில் இருக்கும். நாட்டு மருந்து கடைகளில் நெறிஞ்சில் பொடி கிடைக்கும். 50 வயதை கடந்த ஆண்களுக்கு புரோஸ்டெட் கிளான்ட் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. புராஸ்டெட் சுரப்பி இன உற்பத்திக்கு முக்கியமானது.

உயிரணுக்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. சிறுநீர் பைக்கு கீழே உள்ள புரோஸ்டெட்டில் வீக்கம் ஏற்பட்டால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் ஏற்படும். இப்பிரச்னைக்கு சிறுநெறிஞ்சில் அற்புதமான மருந்தாகிறது.ஒரு கைப்பிடி அளவுக்கு சிறுநெறிஞ்சில் எடுக்கவும். இதில், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர வீக்கம் குறையும். காலையில் ஒருமுறை குடித்துவர பயன்தரும். சிறுநீர் பையில் ஏற்படும் அழற்சியை போக்குகிறது. சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது.

கழற்சிக்காயை பயன்படுத்தி புரோஸ்டெட் சுரப்பி வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம். கழற்சிக்காயை வெயிலில் காயவைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து பொடி செய்யவும். இதேபோல் கெட்டி பெருங்காயம், மிளகை வறுத்து பொடி செய்து கொள்ளவும். 4 ஸ்பூன் கழற்சிக்காய் பொடி எடுத்தால், ஒரு ஸ்பூன் மிளகுப்பொடி, அரை ஸ்பூன் பெருங்காய பொடி அளவில் கலந்து வைத்துக்கொண்டால் இதை மாதம் முழுக்க பயன்படுத்தலாம்.

இந்த கலவையில் அரை ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டுவர வீக்கம் குறையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அரை டம்ளர் மோரில் சேர்த்து கலந்து குடிக்கலாம். தேவையில்லாத வீக்கம் எங்கிருந்தாலும் அதை கரைக்க கூடியதாக கழற்சிக்காய் விளங்குகிறது. வீக்கத்தை கரைக்க கூடிய தன்மை உடையது. நோய் எதிர்ப்புசக்தி கொண்டது.

வீக்கம் இருந்தால் அடிவயிற்றில் பூசக்கூடிய மருந்து தயாரிக்கலாம். 50 மில்லி விளக்கெண்ணெயில், 2 ஸ்பூன் கழற்சிக்காய் பொடி சேர்த்து தைலமாக காய்ச்சவும். நிறம் மாறும்போது இறக்கி வைக்கவும். இதை தூங்கும்போது அடிவயிற்றில் தடவினால் வீக்கம் குறையும். உள் உறுப்புகளின் அழற்சி சரியாகும்.

பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் சத்து குறைபாடுக்கான மருத்துவத்தை பார்க்கலாம். நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்து காலை வேளையில் சாப்பிட்டுவர எலும்பு வளர்ச்சி, கால்சியம் சத்து கிடைக்கும். முருங்கை, அகத்திகீரை சாப்பிட்டால் எலும்பு பலம் பெறும். கால்சியம் குறைபாடு நீங்கும். 

Source : Dinakaran

தலைமுடிக்கு ஆரோக்கியம் தரும் செம்பருத்தி


6
உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதும், தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மை கொண்டதுமான செம்பருத்தியின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். அதிக வெப்பத்தால் சிறுநீர் கோளாறு, தலைமுடி கொட்டுதல், கொப்புளங்கள் உள்ளிட்டவை  ஏற்படும். வியர்வையால் தொல்லை ஏற்படும். வெயிலால் தலைக்கு வரும் பிரச்னைகளை சரிசெய்வது அவசியம். செம்பருத்தி பூவை பசையாக அரைக்கவும்.

குளிப்பதற்கு முன்பு தலையில் நன்றாக தடவி, 15 நிமிடங்களுக்கு பின் குளிக்கவும். வியர்வை, மாசு போன்றவற்றால் தலையில் ஏற்படும் பொடுகு, கொப்புளங்கள் சரியாகும். முடி கொட்டுவது நிற்கும். கண்கள் குளிர்ச்சி அடையும். தலைமுடி ஆரோக்கியம் பெறும். மென்மையாக பட்டுப்போல முடி இருக்கும்.  செம்பருத்தி பூ பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். செம்பருத்தியில் பல்வேறு நன்மைகள் உள்ளன.  உடலுக்கு குளிர்ச்சி தரும். நுண்கிருமிகள் அழிக்கும். எண்ணெய் பசையை போக்க கூடியது.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தால் மூலம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அகத்தி கீரை, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய். அகத்தி கீரையை பசையாக அரைத்து கொள்ளவும். 2 ஸ்பூன் பசையுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை தலைக்கு போட்டு குளிப்பதால் அழுக்குகள் வெளியேறும். உடல் குளிர்ச்சி அடையும். கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் குணமாகும். இது அதிகம் குளிர்ச்சி தரக்கூடியதால் மாதம் ஒருமுறை 10 நிமிடங்கள் வரை ஊறவைத்து குளிப்பது நல்லது.

வாரம் ஒருமுறை பயன்படுத்தும் குளியல் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், சீரகம், பச்சரிசி, எலுமிச்சை, நல்லெண்ணெய். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்வதற்கு முன்பு எலுமிச்சை சாறு சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம், வெந்தயம், பச்சரிசி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும்.

இதை தலையில் தேய்த்து குளிப்பதால் வெயிலால் ஏற்படும் மயக்க நிலை, தலையில் அரிப்பு, முடி கொட்டுதல், கண்கள் சிவந்துபோவது போன்றவை சரியாகும். உடல் குளிர்ச்சி பெறும். அருகம்புல் சாறுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து தலைகுளித்தால் வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கலாம். மாதுளை, வாழைப்பழம், சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவை குளிர்ச்சிக்காக சாப்பிடுவோம். இதன் தோல்களை காயவைத்து பொடியாக்கி சீயக்காய், பாசிபயறு சேர்த்து அரைத்து வைத்து கொண்டு குளித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

Source : Dinakaran

உணவில் சிறந்தது சிறுதானியம்...


0
ஆறுமாதக் குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். ஒவ்வொரு சிறுதானியத்துக்கும் தனித்துவச் சிறப்புகள் உள்ளன. எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.

கம்பு : ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும். உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.

தினை : இதயத்தைப் பலப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையைத் தரும்.

சாமை : ரத்தசோகையைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் தீரும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.

சோளம் : உணவுக் குழாய் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படும். ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யும். செரிமான சக்தி மேம்படும். வாயுத்தொல்லை நீங்கும். உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது.

கேழ்வரகு : எலும்புகளை உறுதிசெய்யும். இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். சருமத்தில் பளபளப்பு உண்டாகும்.

வரகு : உடல் எடையைக் குறைக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மூட்டுவலி இருப்போர் அவசியம் சாப்பிட வேண்டும். சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்லது.

குதிரைவாலி : சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும்.

Source : Dinakaran

Wednesday, July 27, 2016

மணிலா சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை செலவை குறைக்க வலியுறுத்தல்


மணிலா சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று காஞ்சிபுரம் விதை பரிசோதனை நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விதைப் பரிசோதனை அலுவலர் ஹேமேந்திர குமார் பாண்டே வெளியிட்ட அறிக்கை:
ஆடிப் பட்டத்தில் சாகுபடியாளர்களுக்கு அதிக இடுபொருள் தேவைப்படுவது, மணிலா விதைக்கேயாகும். எனவே, தரமான விதையாக இருந்தால் தேவையானவற்றை மட்டும் பயன்படுத்தி விதைச் செலவை
குறைக்கலாம். மணிலாவைப் பொருத்தவரை, குறைந்தபட்ச முளைப்புத் திறன் 70 சதவீதம் இருந்தால் தான் ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.
இவ்வாறு பராமரிக்கும்பட்சத்தில், ஒரு செடிக்கு 40 காய்கள் கிடைக்கும். இதனால் விவசாயிகள் தற்போது பெறுகின்ற மகசூலைவிட 50 சதவீதம் கூடுதலாகப் பெற முடியும்.
எனவே, விவசாயிகள் தங்களிடம் இருப்பில் உள்ள மணிலா விதையில் அரை கிலோ அளவுக்கு விதை மாதிரி எடுத்துக்கொண்டு விதைப் பரிசோதனை அலுவலர், விதைப் பரிசோதனை நிலையம்,
காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு ரூ.30 பரிசோதனை கட்டணத்துடன் நேரில் அணுகலாம் அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 Source : Dinamani

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கிருஷ்ணகிரியில் வருகிற 28ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. 
இது  குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 28ம் தேதி காலை 11 மணிக்கு  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடைபெறுகிறது. எனவே, இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என்ற அதில் தெரிவித்துள்ளனர்.

Source : Dinakaran

Farmers told to adopt site-specific nutrient management for tapioca


Scientists of the Central Tuber Crops Research Institute, Thiruvananthapuram, urged the farming community to adopt site-specific nutrient management for tapioca.
At a seminar organised recently by the Krishi Vigyan Kendra (KVK) in association with the ICAR – Central Tuber Crops Research Institute (CTCRI) to sensitise the tapioca growers on latest varieties, production and protection technologies, the programme coordinator of KVK, N. Sriram said tapioca is one of the important crop in Tamil Nadu and is cultivated in more than one lakh hectares. N. Elango, Joint Director of Agriculture, in his inaugural address, said that tapioca is introduced as alternate crop especially in the rain-fed areas.
Of late the farmers have leant the skills and knowledge to improve the production, but have not developed the capacity to deal with market. He urged the scientists to develop starch rich, short duration and drought tolerate tapioca varieties for the improving the livelihood status of the rain fed farmers.
Mr. Elango released the site specific nutrient management for tapioca CD and pamphlet. M. N. Sheela, Principal Scientist and Head, Crop Improvement Division of CTCRI, distributed new tapioca variety namely Sree Pavithra to the farmers as alternate variety for Mulluvadi and H266 varieties.
V. Ravi, Head, Crop Production Division, presented the site specific nutrient management strategies for tapioca. Dr. Ravi also shared the research experience on mulching technology in tapioca to manage weeds and other related problems.
R. Muthuraj, senior scientist, seed technology, shared his research experience on different tapioca planting methods to effectively utilise the available seed materials. Farmers and scientists interaction session also formed part of the seminar.
Mini exhibition on tapioca technologies attracted the participants.

Source : The Hindu 

E-auction soon at turmeric complex in Karumandisellipalayam


E-auction is expected shortly at the massive turmeric complex at Karumandisellipalayam, the largest of the four auction centres in the district, that functions under the Erode Market Committee.
Arrangements have been made for conduct of e-auction and electronic display of rates for convenience of traders, said L. Kolandaivelu, secretary of Erode Market Committee. Traders would be able to save substantial time under e-auction system, Mr. Kolandaivelu said.
Managed by Perudnurai Regulated Market, the turmeric complex at Karumandisellipalayam witnesses a daily average sale of 1,000 bags, each weighing 65 kg. Depending on quality, farmers get returns ranging from Rs. 7,000 to Rs. 9,500 for the finger (virali) and bulb (kilangu) varieties.
There is fluctuation in arrivals. On some days, the number of bags will come down to 500, and on certain days, the number will shoot up.
For instance, on Friday last week, double the usual level of arrival was witnessed. Farmers had brought 2,141 bags, each weighing about 80 kg, and their produce was displayed in 151 lots. The highest rate for finger variety was Rs. 9,513 per quintal and the lowest fetched Rs. 7,764 per quintal.
The bulb variety was auctioned for rates ranging from Rs. 8,569 to Rs. 7,713 per quintal. As many as 1,837 bags were purchased by 25 traders. Only 13 lots were cancelled, said Arjunan, superintendent of Perundurai Regulated Market.
Farmers patronise the complex not only because it has five godowns with an overall storage capacity of 15,200 tonnes: one with 10,000 tonne capacity, two with 2,000 tonnes capacity each, and two with 600 tonnes capacity each, but also in view of the other facilities including transaction shed, rest rooms, drying yard, weigh bridge, canteen and a large parking space.
The farmers said they preferred the turmeric complex for selling their produce since no commission was levied.
Also, farmers are permitted to stock their produce at the turmeric complex for 15 days free of cost.
At the other three auction centres in the district, commission upwards of 1.5 per cent is levied.
While the auction centre run by Turmeric Traders-cum-Godown Owners’ Association at Semmampalayam near Nasiyanur is controlled by Erode Regulated Market, the Erode Agricultural Producers Cooperative Marketing Society conducts auction at Karunkalpalayam and the Gobi Agricultural Producers’ Cooperative Marketing Society conducts auction at its branch office building in Manikoondu in the city.
The auction is conducted first at Karumandisellipalayam at 10 a.m. Subsequently, the trade is carried out at Semmampalayam (11 a.m.), Karunkalpalayam (12 noon) and Manikoondu branch office of Gobi Agricultural Producers’ Cooperative Marketing Society (1 p.m.).

Source :The Hindu 

Now, farmers can detect aflatoxins with this low-cost device


Handy:First portable low-cost device developed for rapid detection of aflatoxins in Medak.–Photo: By arrangement
 
 
A new technology that detects aflatoxins on location was developed by International Crops Research Institute for the Semi-Arid Tropics (ICRISAT) and it was formally released on Tuesday. The rapid test kit device is also affordable at under US$ 2.
This exciting advancement combined with a mobile extraction kit that will be ready in two months, will be the first portable cost-effective way for farmers and others to detect aflatoxins instantly.
With funding from the McKnight Foundation and in collaboration with partners including the National Smallholder Farmers Association of Malawi-NASFAM, Farmers Union Malawi (FUM), Kamuzu Central Hospital and Nkhoma Hospital, Malawi, the International Crops Research Institute for the Semi-Arid Tropics (ICRISAT) developed the rapid test kit for aflatoxins. It is a simple non-laboratory based kit that can be used directly by non-technical people such as farmers, agro-dealers and food processors. Currently, the test can be applied to detect aflatoxin in groundnuts.
The test kit launched officially by Dr. Wilkson Makumba, Director, Department of Agricultural Research Services (DARS), Lilongwe at ICRISAT-Malawi, requires limited technical knowledge or training and can be done on location.
The new test is simple to perform and can detect contamination at levels of 10 parts per billion (ppb) in less than 15 minutes. “The device will contribute to manage and reduce the entry of aflatoxins in the food value chains, improve diagnosis for local and export trade and support the food processing industry to maintain low exposure levels in food products in our local markets as well as for export markets,” said Dr. Anitha Seetha, Scientist, ICRISAT, Malawi. Groundnut, maize, sorghum, pearl millet, chilies, pistachios, cassava and other food products are contaminated by aflatoxin each year.
“ICRISAT has been working with smallholder farmers in Africa to combat the aflatoxin problem. This kit will enable rapid and cost-effective deployment by the government and private sector to protect public health and also improve the export prospects for African countries,” said Dr. David Bergvinson, Director General, ICRISAT.

Source : The Hindu 

Pig farmers warned


The Animal Husbandry Department has warned pig farmers of stringent action if they allow the animals roam freely on roads in the Vizianagaram municipal limits. The action includes bind-over cases under Section 107 on pig farmers. At a meeting on Tuesday, Joint Director (AH) Y. Simhachalam asked officials to put a check on pig menace in the fort town.

Source : The Hindu 

Sensors to monitor, regulate moisture content in fields


Economy:A scientist showing the water-saving balls at a field in Agricultural Engineering College and Research Institute in Kumulur near Tiruchi.— Photo: A.Muralitharan
 
 
The Tamil Nadu Agricultural University’s Agricultural Engineering College and Research Institute at Kumulur near here has developed a couple of sensors to monitor and regulate water and moisture content in agricultural fields.
The sensors can be effectively used for ascertaining whether the plants are too dry and require irrigation.
Water is often wasted extensively by many farmers due to the misconception that more water will ensure higher yield and quality. K. Ramaswamy, Dean of the Institute, observed that the two devices could be effectively used by farmers to maintain optimum level of irrigation and conserve water. The Institute has planned to sensitise the farmers to the importance of conserving water and avoiding excess supply through the use of the devices.
The water sensor contains two balls which act as a switch. Once there is excess flow, the balls starts floating thereby switching off the electrical circuit.
The components can be easily maintained in case of any fault or technical snag. The GSM- based controller has been linked with sensor unit for switching on or switching off the agricultural pumpset. It can also be operated using mobile phone, said Mr. Ramaswamy. Field tests were conducted to evaluate the efficiency of water level sensor in different fields. Crop yield was found to enhance even while achieving economy of water used for irrigation.
The moisture sensor can be utilised to maintain the moisture content at the desired level. Once the moisture level is achieved, the water supply could be switched off.

Source : The Hindu 

Maharashtra: Area under pulses has increased by over 46 per cent

THANKS to the good price fetched by arhar (tuar) and the special emphasis by state government on increasing the area under pulses, the area of the crop has increased by over 46 per cent compared to last year in the state.
The crop was sown on 8.5 lakh hectare (ha) compared to average area of about 12 lakh ha. This year, the area has gone up to 13.94 lakh ha, according to statistics provided by Agriculture Commissioner Vikas Deshmukh.
“And, we still have 10 per cent of sowing to go in paddy areas of Vidarbha and Konkan. So, the area under the crop will go further up by a few thousand hectare,” Deshmukh told The Indian Express.
Deshmukh added, “The state government has also been emphasising on promoting pulses by spending over Rs 2,500 crore on a ‘demonstration and distribution’ programme by selecting plots of about 100 ha each in selected villages and providing free inputs to farmers.”


 In Vidarbha, the government has been promoting arhar crop on the paddy bunds too as a kind of intercrop since the last few years.
Apart from arhar, moong (green gram) and udid (black gram) sowing has also gone up taking the overall area under pulses from 14.9 lakh ha last year to 23.5 lakh ha. The average area under pulses in the state is 21.82 lakh ha.
“Good price fetched by the crop is the most important factor behind this growth,” Deshmukh added.
The increase in pulses is mainly at the expense of cotton, whose area has come down from an average of 41 lakh ha to 36 lakh ha, Deshmukh said.
The bulk increase — happened in Amravati division of Vidarbha with the average arhar area of four lakh ha — has gone up from 3.91 lakh ha last year to 4.91 lak ha, an increase of one lakh ha. The division, which is the state’s main cotton bowl, has seen a drop in cotton area from 9.5 lakh ha last year to 8.7 lakh ha this year. Soyabean has dropped from 15.35 to 14.30 lakh ha.
Among the crops that yielded area to pulses are also cereals and soyabean, according to Joint Director (Agriculture) S R Sardar.
In Amravati, moong has gone up from 78,000 ha last year to 1.1 lakh ha this year. Comparative udid figures are 54,800 and 1.01 lakh ha.

Source : Indian Express

No sign of let up in pulses imports




India’s pulses imports are expected to remain high in the current financial year despite brighter prospects for the domestic harvest as farmers have chosen to plant more of these grain legumes in the ongoing kharif season.
The Indian Pulses and Grains Association (IPGA), the apex trade body, has projected imports for the current financial year to be at 6-6.5 million tonnes (mt) — up from actual imports of 5.7 mt last fiscal year.
Attributing the high imports to rising consumption, IGPA Chairman Pravin Dongre said the next chana crop will be harvested in March 2017 and import estimates are for April 2016-March 2017. “Any reduced imports will reflect in 2017-18 and not in 2016-17,” he said.
A weak monsoon and adverse weather had impacted the chana crop this year (chana accounts for about half the pulses output of 17 million tonnes) resulting in a major deficit.
IPGA estimates that the chana crop harvested in March 2016 was about 15-20 per cent lower than the Centre’s estimate of 7.48 mt, a trend reflected in the mandi arrivals.
The trade has contracted 3 mt for imports, which will arrive between September and December, Dongre said. Peas imports between September and December will be approximately 1.5 mt, while the import of chana and arhar during the period are pegged at 0.8 mt and 1.5 lakh tonnes respectively.
Prospects this year
Dongre said pulses output in the current kharif season would be 40-50 per cent higher over last year’s 5.49 mt.
The projected higher output is based on the increased acreage as record prices have prompted farmers across the country to migrate to pulses from cotton and soyabean. Pulses acreage till last week was up 39 per cent at 90 lakh hectares. Even the global crop is higher this year.
In Canada, production is up 40 per cent, while in Australia the forthcoming crop is 50 per cent higher. In Africa, the crop is up 15-20 per cent.
“We believe there will be a sharp correction in prices on larger availability of pulses,” Dongre said.
India is the largest producer, consumer and importer of pulses in the world. Pulses are the major source of protein for a large section of the population and the country still relies on the imports to meet demand.
The government made pulses imports duty free last December after a surge in prices had fuelled food inflation.
Rising population and income levels have been driving consumption, which is estimated to be growing at 2-3 per cent annually. 

Source : BusinessLine

Agri scientist Swaminathan suggests 'Flood Codes' to help farmers


President Pranab Mukherjee sharing a word with Agriculture scientist M S Swaminathan (TOI file photo)
 
NEW DELHI: Amid reports of floods in the riverine portions of Bihar, Assam and West Bengal, the eminent agriculture scientist M S Swaminathan on Tuesday pitched for preparation and operation of 'Flood Code' - an anticipatory code of action - for such regions.

Under the Flood Code, alternative crops must be kept ready so that as soon as the flood recedes, they can be planted in the diara land which tends to get submerged during the monsoon.

"The strategy should be planting saathi maize (60 day variety), sweet potato and rice varieties with genes for stem elongation. In this way, farmers may get atleast one crop and some income for their food and livelihood needs", said Swaminathan, known as father of Green Revolution in India.

He said, "The Flood Code would become the saviour of farm families in the flood prone areas and thereby enhance their coping mechanism to such extreme conditions".


Posting his statement, the M S Swaminathan Research Foundation noted that since flooding is not uncommon in such regions, the agriculture scientist had proposed having 'Flood Codes' over 40 years ago as floods cause not only damage to crops and property but also can lead to post-flood problems like food and famine.

"With climate change which can enhance the frequency of occurrence of drought and floods, such an anticipatory code of action supported by appropriate planting material will insulate the local communities from total loss of food and livelihood security", said Swaminathan.

Source : TOI

'அசில்' கோழிகளுடன் ஒருங்கிணைந்த பண்ணை


t

திண்டுக்கல் - மதுரை ரோட்டிலுள்ளது கோட்டைப்பட்டி. இங்கு கோழிப்பண்ணை, நிழல்வலைக்கூட நாற்றங்கால் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து மாதம் ரூ.30 ஆயிரம் வருவாய் ஈட்டுகிறார், விவசாயி சரவணன்.

'அசில்' கோழிகள்: இவர் 50 சென்ட் நிலத்தில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் கோழிப் பண்ணை 'செட்' அமைத்துள்ளார். ஆந்திராவில் கிடைக்கும் நாட்டுக் கோழி குஞ்சுகள் (அசில் ரகம்) தலா ரூ.30க்கு 100 குஞ்சுகளை வாங்கி, பண்ணையில் சுத்தமான மணல், சுண்ணாம்பு பூச்சு, சுகாதாரமான காற்றோட்டத்தில் கோழிகளை 90 நாள் வளர்க்கிறார். ஒரு அசில் ரக கோழிக்கு 90 நாட்களுக்கு 2.5 கிலோ தீவனம் தேவை. நுாறு கிலோ தீவனத்திற்கு, '50 கிலோ மக்காச்சோளம், 10 கிலோ கம்பு, 10 கிலோ தவிடு, 5 கிலோ கடலை புண்ணாக்கு அல்லது சோள புண்ணாக்கு தேவை. இயந்திர அரவை மூலம் கோழி உண்ணும் அளவில் அரிசியை பதமாக உடைக்க வேண்டும்.
இத்துடன் உப்புச்சுவையற்ற கடல் கழிவு மீன்கள் 5 கிலோவை கலக்க வேண்டும். அது ஈரப்பதமாக இருப்பதற்காக, ஒரு கிலோ 'ரைஸ் பிராண்ட் ஆயில்' மற்றும் 'மினரல் மிக்சர்' ஒரு கிலோ (ரூ.50) வாங்கி கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். கோழிகளுக்கு காலை, மாலை தீவனம் வழங்க வேண்டும். சுகாதாரமான குடிநீரை வழங்க, வாரத்தின் இரு நாள் சிறிதளவு மஞ்சள் பொடி கலந்து கொடுக்க வேண்டும். இதுமாதிரி பராமரித்தால் 90 நாளில் 
ஒவ்வொரு கோழியும் ஒரு கிலோ முதல் ஒன்றரை கிலோ எடை இருக்கும்.

மாதம் ரூ.30 ஆயிரம்
சரவணன் கூறியதாவது: தீவனம் ரூ.75, கொள்முதல் ரூ.30, நோய் தாக்குதலின் போது தரப்படும் 'டானிக்' ரூ.15 ஆக ஒரு கோழிக்கு ரூ.115 வளர்ப்புச் செலவாகிறது. வளர்ந்த பிறகு ஒரு கிலோ ரூ.190 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யலாம். இதனால் 90 நாளில் 100 கோழிகள் விற்பனையில் ரூ.11 ஆயிரத்து 500 லாபம் கிடைக்கும். கோழி வளர்ப்புடன் மானிய உதவியுடன் பசுமைக்குடிலும் அமைத்துள்ளார். வீரியரக தக்காளி விதை 10 கிராம் ரூ.350, மிளகாய் 10 கிராம் ரூ.450க்கும், கத்தரி விதை 10 கிராம் ரூ.250க்கும் வாங்கினேன். குழித்தட்டில் தென்னமர மஞ்சு கொண்டு நிரப்பி, அதில் விதைகளை நட்டு எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்து கொண்டேன். 
விதை, விதைப்பு, கூலி, பராமரிப்பு என மாதம் ரூ.2700 செலவானது. அதிக வெப்பம் தாக்காமல் இருக்க பூவாளியால் நீர் பாய்ச்சினேன். 
30 நாட்களில் ஒரு லட்சம் நாற்றுக்கள் விற்பனைக்கு தயாரானது. 35 நாள் கத்தரி நாற்று ஒன்று 60 காசு, 25 நாள் தக்காளி நாற்று ஒன்று 45 காசு, 42 நாள் மிளகாய் நாற்று ஒன்று 65 காசுக்கு விற்றேன். இதன் மூலம் சந்தை நிலவரப்படி ரூ.7 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. ஒருங்கிணைந்த பண்ணை மூலம் மாதம் ரூ.18,500 கிடைக்கிறது, என்றார்.
தொடர்புக்கு 97915 - 00783.
-வீ.ஜெ.சுரேஷ், திண்டுக்கல்
.

Source : Dinamalar

பால் உற்பத்திக்கு தடையாகும் மடிவீக்க நோய்




கறவை மாடுகளை விவசாயிகள் வளர்ப்பது பால் உற்பத்திக்காகத்தான். மடி இல்லையேல் மாடு இல்லை என்பர். பால் உற்பத்தியின் முக்கிய அங்கமான மடியில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் விவசாயிகள் உடன் கவனிக்க வேண்டும். கிராமங்களில் கறவை மாடு வளர்ப்போர் மடி நோயினை ஆரம்ப கால கட்டத்தில் சிகிச்சையளிக்காமல் விட்டு விடுகின்றனர். மாட்டிற்கு திருஷ்டி பட்டு விட்டது என நினைத்து சிகிச்சை அளிக்காமல் விட்டு விடுவர். குறைந்தது மூன்று நாளாவது இச்செயலை மாடு வளர்ப்போர் செய்யும் போது மடி வீக்க நோயின் தாக்கம் அதிகரித்து முற்றிய நிலையை அடைகிறது.

காலம் கடந்த சிகிச்சை: பின் கால்நடை மருத்துவரின் உதவியை நாடுகின்றனர். ஒரு சில நேரங்களின் மருந்துகளின் வீரியத்துக்கு கட்டுப்படாமல் கிருமிகளின் எண்ணிக்கை பெருகி பஞ்சு போன்ற திசுக்களை மாற்றி பாறாங்கல் போன்று திசுக்களை கொண்ட மடியாக மாற்றி விடுகிறது. இதன் விளைவு அந்த ஈத்தில் பால் உற்பத்தியை கணிசமான அளவில் விவசாயிகள் இழந்து விடுகின்றனர். 
மடிவீக்க நோய் முழுவதுமாக பாக்டீரியா கிருமிகளினால் உண்டாகிறது. பாலில் பாக்டீரியா கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலை அபரிதமாக இருப்பதால் எண்ணிக்கையில் பன்மடங்காக நாளுக்கு நாள் பாக்டீரியா கிருமிகள் பெருகுகின்றன. அவைகளின் வளர்ச்சி மாற்றத்தால் ஏற்படும் கழிவுகள் பால் மடியின் பஞ்சு போன்ற மிருது தன்மையை மாற்றி பாறாங்கல் போல் ஆக்குகின்றன.

தென்படாத மடி வீக்கம்: ஆரம்ப காலத்தில் மடி வீக்க நோயினால் மடி வீக்கம் தென்படாது. மாறாக சுரக்கும் பால் தண்ணீர் போன்றோ, திரிதிரியாகவோ சுரந்தால் அது மடிவீக்க நோயின் ஆரம்ப அறிகுறியாகும். ஸ்டெர்ப்டோகாக்கை, ஸ்டெபிலோகாக்கை, சூடோமோனாஸ், கொரினிபாக்டீரியம், கோலிபார்ம் போன்ற பாக்டீரியா இனங்கள் மடியை பாழாக்குகின்றன. இது மடி நோய் ஏற்பட முதல் காரணமாகும். அதிகளவில் நீண்டு தொங்கும் இயற்கையாக அமைந்த மடி உள்ள கறவை மாடுகள் மடி நோய் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகின்றன. நீண்டு தொங்கும் மடியினால் தரையில் உராய்வு ஏற்பட்டு சிறு கீறல்கள் மடியில் உண்டாகும். இக்கீறல்கள் மூலம் பாக்டீரியா கிருமிகள் மடியினுள் உட்புகும்.

மருத்துவ சிகிச்சை அவசியம்: சாதாரணமாக பால் சுரக்கும் ஆரம்ப நாட்களிலும் பால் சுரப்பின் கடைசி நாட்களிலும் மடி வியாதி தோன்றலாம். சுரக்கின்ற பாலை முழுவதும் கறக்காமல் மடியில் விட்டு வைத்தால் இந்நோய் வர வாய்ப்புண்டு. மடி நோயால் விவசாயிகளின் அன்றாட வாழ்வில் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதால் இந்நோய் கறவை மாடுகளுக்கு ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும். 
கறவை மாடுகளின் மடி பாகங்களை தேய்த்து கழுவி தினமும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். காற்றோட்டமான வெளிச்சமான கொட்டில்களில் கறவை மாடுகளை கட்டி பராமரிப்பது நல்லது. பால் கறக்க சுத்தமான பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். பால் சுரப்பு கறவை மாடுகளில் குறைய நேரிட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரின் உதவியை கொண்டு உரிய காரணத்தை தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும். பின் அதற்கு தக்க மருத்துவ 
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
-வி.ராஜேந்திரன்,
(ஓய்வு)இணை இயக்குனர்,
கால்நடை பராமரிப்புத்துறை,
94864 6904
4

Source : Dinamalar

கத்திரிக்கா... குண்டு கத்தரிக்கா...


t

சாகுபடிக்கு ஏற்ற இனங்களாக கோ 1, கோ 2, எம்.டி.யு., 1, பி.கே.எம்., 1, பி.எல்.ஆர்., 1, கே.கே.எம்., 1, அண்ணாமலை ஈ.கோ.பி.எச்., 1 (வீரிய ஒட்டு ரகம்), அர்கா நவனீத், அர்காகேசவ், அர்காநிரி, அர்காசிரீஸ், அர்கா ஆனந்த் போன்றவை. 
நல்ல வடிகால் வசதியுள்ள, அங்ககப் பொருட்கள் நிரம்பிய மண் வகைகள் உகந்தன. டிசம்பர் - ஜனவரி மற்றும் மே - ஜூன் மாதம் விதைப்பதற்கு உகந்த மாதங்கள். எக்டேருக்கு 400 கிராம் விதை தேவை. எக்டேருக்கு 100 சதுர மீட்டர் நாற்றங்கால் அளவு இருக்க வேண்டும்.

விதையும், விதைப்பும்: ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது கேப்டான் அல்லது திரம் 2 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். மேலும் விதைகளை அசோஸ்பைரில்லம் கொண்டும் நேர்த்தி செய்ய வேண்டும். 
400 கிராம் விதைகளுக்கு 40 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் சிறிது அரிசிக் கஞ்சி சேர்த்து நேர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை, உயரமான பாத்திகளில் 10 செ.மீ., இடைவெளியில் அரை அங்குல ஆழத்திற்கு கோடுகள் போட்டு அதில் விதைகளை பரவலாக துாவ வேண்டும். விதைத்த பின் மணல் போட்டு மூடி உடனே நீர் பாய்ச்ச வேண்டும்.

உரப் பாசனம்: கலப்பு ரகங்களுக்கு ஊட்டச்சத்தின் அளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 200:150:100 கி.கி., ஆகும். 
இதில் 75 சதவிகிதம் மணிச்சத்தை (112.5 கி.கி., மணிச்சத்து 703 கி.கி., சூப்பர் பாஸ்பேட்டில் உள்ளது) அடியுரமாக அளிக்க வேண்டும். 
மீதமுள்ள தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 200:37.5.100 கி.கி., உரப்பாசனமாக அளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் நீர்ப்பாய்ச்ச வேண்டும். அதனுடன் கரையும் உரப்பாசனம் அளிக்க வேண்டும். அளவை பிரித்து பயிரின் ஆயுட்காலம் முழுவதும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை உரப்பாசனமாக அளிக்க வேண்டும். 
நீர் நிர்வாகம், களை கட்டுப்பாடு மற்றும் களை நிர்வாகம், வளர்ச்சி ஊக்கிகள், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, தண்டு மற்றும் காய்த்துளைப்பான் நோய் தடுப்பு முறைகளை பின்பற்றி நடவு செய்த 55 முதல் 60 நாட்களில் முதல் அறுவடை ஆரம்பிக்கும். காய்கள் பிஞ்சாக விதைகள் முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்ய வேண்டும். 
காய்களை 4 முதல் 5 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்.எக்டேருக்கு 150 முதல் 160 நாட்களில் 25 முதல் 30 டன்கள், வீரிய ஒட்டு ரகங்களில் 45 முதல் 50 டன்கள் வரை மகசூல் கிடைக்கும்.
- பூபதி, இணை இயக்குனர்
தோட்டக்கலைத்துறை, மதுரை

Source : Dinamalar