Thursday, February 4, 2016

மானிய விலையில் விவசாய கருவி வழங்கல்


 பகண்டைகூட்ரோடு வேளாண் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விசை உழுவை கருவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த பகண்டைகூட்ரோடு வேளாண் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு
சர்க்கரை ஆலைத் தலைவர் கதிர் தண்டபாணி தலைமை தாங்கினார். அருணகிரி முன்னிலை வகித்தார். உதவி வேளாண் அலுவலர் தாமோதரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 10 விவசாயிகளுக்கு, மானிய விலையில் விசை உழுவை இயந்திரம் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய துணை செயலாளர் அன்பரசு, வேளாண் அலுவலர்கள் ஆனந்தன், சிவசங்கரன், செந்தில், ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேகர் நன்றி கூறினார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment