Friday, February 26, 2016

உணவு தானிய உற்பத்தி இலக்கு: 1.32 மெட்ரிக் டன் எதிர்பார்ப்பு


கரூர் மாவட்டத்தில் நடப்பாண்டு, 1.32 மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் ராஜேஷ் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தின் குளிர்கால பருவ சராசரி மழையான, 16.80 மில்லி மீட்டரை எட்டும் அளவிற்கு மழை பெறவில்லை. சம்பா பருவத்தில் நெல், 12 ஆயிரத்து, 872 ஹெக்டர், சிறுதானியப் பயிர்கள், 23 ஆயிரத்து, 859 ஹெக்டர் மற்றும் பயிறுவகைப் பயிர்கள் 13 ஆயிரத்து, 635 ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடக்கிறது. கரூர் மாவட்டத்தின் உணவு தானிய உற்பத்தி, 1.32 லட்சம் மெட்ரிக் டன்னாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்த உற்பத்தி: நெல், சிறுதானியப் பயிர்கள், பயிறுவகைப் பயிர்கள் ஆகியவைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பயிர் அறுவடைப் பரிசோதனை முடிவுகள் படியும், மற்ற பயிர்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மகசூல் காரணிகள் கணக்கீடு முறையில் கணிக்கப்பட்டுள்ள மகசூல்படியும் அனைத்து உணவு தானியப் பயிர்களில் மொத்த உற்பத்தி, 1.50 லட்சம் மெட்ரிக் டன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடைப் பருவத்தில் இதுவரை, 321 ஹெக்டரில் சிறுதானியப் பயிர்கள், 338 ஹெக்டரில் பயறுவகைப்பயிர்கள், 2,000 ஹெக்டரில் எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சூப்பர் பேக்: அனைத்து தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா, 1,194 மெட்ரிக் டன், டி.ஏ.பி., 542 மெட்ரிக் டன், பொட்டாஷ், 753 மெட்ரிக் டன், கலப்பு உரங்கள், 886 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பில் உள்ளது. சர்வதேச நெல் ஆராய்ச்சிக் கழகம், பிலிப்பைன்ஸ் மூலம் சூப்பர் பேக் என்ற புதுக்கருவியை விவசாயிகள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூப்பர் பேக் மூலம் விதைகளை சேமிப்பு வைப்பதால் நெல் விதையின் செயல்திறன், விதையின் தரம், விதையின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது. பூச்சி மற்றும் எலி தாக்குதலைத் தவிர்க்கவும், 15 சதவீதம் அறுவடை பின்செய் இழப்பினைத் தவிர்க்கவும் இது பயன்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Dinamalar

No comments:

Post a Comment