Wednesday, February 24, 2016

மார்ச் 1 முதல் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம்


காஞ்சிபுரத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் மார்ச் 1-ஆம் தேதி தொடங்குகிறது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி வெளியிட்ட அறிக்கை:
 கால்நடைகளில் ஏற்படும் தொற்று நோயான கால், வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம் கால்நடைகள் இறக்கின்றன. இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் கால்நடைகளுக்கு ஏற்படுகின்றன.
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் மார்ச் 1-ஆம் தேதி முதல் மார்ச் 21-ஆம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள், 4 மாதத்துக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு மார்ச் 1-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை தங்கள் கிராமத்துக்கு வரும் கால்நடை பராமரிப்புப் பணியாளர்கள் தங்கள் கால்நடைகளுக்கு கால், வாய் கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
 
Source : Dinamani

No comments:

Post a Comment