Wednesday, February 24, 2016

அதிசய செங்குத்து நகரம்






புதுடில்லியில், 2022ல் ஒரு புதிய கட்டடக் கலை முறையை அறிமுகப்படுத்தவிருக்கிறார் பெல்ஜியத்தை சேர்ந்த கட்டடக்கலை வல்லுனர் வின்சென்ட் காலிபாட். இது, முழுக்க முழுக்க சுற்றுச்சூழலை மையப்படுத்தி அமைக்கப்படும், 'செங்குத்தான கிராம'மாக இருக்கும். 
குறைந்தது, 36 மாடிகளைக் கொண்ட இந்த உயர் கட்டடங்களில், நிறைய பசுமையான தாவரங்கள் இருக்கும். இதில் வசிப்பவர்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை பால்கனி, மேற்கூரை, ஜன்னல் ஓரம் ஆகிய பகுதிகளில் விளைவித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். கட்டட வளாகத்திற்குள்ளேயே மீன் வளர்ப்பு, திடக் கழிவுகளை உரங்களாக ஆக்குவதற்கும் வசதிகள் இருக்கும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, சிமென்ட் உபயோகத்தை குறைத்து, மரங்களே இதில் அதிகமாக பயன்படுத்தப்படும். இந்த கட்டடக்கலைக்கு, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னிய மரமான, 'ஹைப்பரியோன்' என்ற மரத்தின் பெயரை சூட்டியுள்ளனர்.

Source : Dinamalar

No comments:

Post a Comment