Tuesday, February 23, 2016

கறவை மாடு வாங்க மானிய உதவி: 'டாப்செட்கோ' அழைப்பு


கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ளோரை ஊக்குவிக்கும் விதமாக, இரு கறவை மாடுகள் வாங்க, 'டாப்செட்கோ' சார்பில், கூட்டுறவு வங்கிகளில், மானிய கடன்
உதவிகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) சார்பில், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு திட்டங்களில், கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. இதில் கடன் பெற, கிராமப்புறத்தில் வசிப்போராக இருப்பின், 81 ஆயிரத்துக்குள்ளும், நகர்புறமாக இருப்பின், 1.03 லட்சத்திற்கு மிகாமலும், ஆண்டு வருமானம் இருப்பது கட்டாயம்.
குடும்பத்தில், 18 - 60 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு மட்டுமே, கடன் பெறும் தகுதி இருப்பதால், ஜாதி சான்று, குடும்ப அட்டை, இருப்பிட சான்று உடன் கொண்டு வருதல் அவசியம்.
இதில், இரு கறவை மாடு வாங்க, 60 ஆயிரம் ரூபாய் வரை, மானியக்கடன் உதவிகள் அளிக்கப்படுகின்றன. இக்கடன்களை, அருகிலுள்ள, கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் அட்டவணையிடப்பட்ட தனியார் வங்கிகளிலும் பெறலாம்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ராமசாமி கூறுகையில், ''கறவை மாடு வளர்ப்பில் ஆர்வமுள்ளோருக்கு, 60 ஆயிரம் கடன் தொகை, ஆறு சதவீத
வட்டியில் அளிக்கப்படுகிறது.
''இத்திட்டத்தில் பங்கேற்க தகுதியுள்ளோர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில், விண்ணப்பத்தை பெறலாம். சான்றிதழ்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், ஆய்வுக்கு உட்படுத்தி கடன் வழங்கப்படும். கூடுதல் தகவலுக்கு, 0422- 2300 403 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment