Wednesday, February 3, 2016

ஜம்படை கிராமத்தில் பயிர் கடன் சிறப்பு முகாம்

மணலூர்பேட்டை பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மணலூர்பேட்டை பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில் நாளை(4ம் தேதி) காலை 9 மணிக்கு ஜம்படை ஊராட்சி ஒன்றிய நடு
நிலைப்பள்ளியில் பயிர்க்கடன் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட கடும் வறட்சி உள்ளிட்ட விவசாய மகசூல் பிரச்னைகளால், வங்கியில் டிராக்டர் மற்றும் விவசாய இயந்திரங்கள் கடன், கரும்பு, நெல் பயிர் கடன் பெற்று குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பி செலுத்த இயலாத சூழலில் இருக்கும் வராக்கடன் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஒரே தவணையில் தீர்வு, வட்டி சலுகை மற்றும் பயிர்க்கடன் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சம்பந்தப்பட்ட அனைத்து கிராம வாடிக்கையாளர்களும் முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வதோடு, கரும்பு, நெல் வேர்க்கடலை, உளுந்து, மக்காசோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் புதிய சிட்டா, அடங்கல் உள்ளிட்ட நில ஆவணங்கள் எடுத்து வந்து தங்களது பழைய பயிர்க்கடன்களை புதுப்பித்தும், புதிய பயிர்க்கடன்களை பெற்று பயனடையலாம். முகாமில், ஒரே தவணையில் பணத்தை முழுவதும் திருப்பி செலுத்தி தீர்வு பெற முன்வருபவர்களுக்கு கூடுதல் வட்டி சலுகை வழங்கப்படும்.

Source : Dinakaran

No comments:

Post a Comment