கரூர் மாவட்டத்தில் வரும் 9ம் தேதி முதல் 22ம் தேதி வரை இருவாரம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிமுகாம் நடை பெறவுள்ளது. ராணிப்பேட்டை கால்நடைநோய்தடுப்பு மருந்து நிலையத்தில் இருந்து 1.40 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி மருந்து பெற்று பயன்பாட்டிற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவர்களது பகுதியில் உள்ள கால்நடை கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களில் தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், கால்நடை பராமரிப்புத்துறையினரால் மேற்கொள்ளப்படும் முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடுதல் அவசியம். எனவே பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து தடுப்பூசிபோட்டு பயன்பெறுமாறு கலெக்டர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment