Thursday, February 4, 2016

அறிவியல் ஆயிரம்


கும்பகோண கொழுந்து வெற்றிலை

மகாமகம் நடக்கும் கும்பகோணம் கொழுந்து வெற்றிலைக்கும் பெயர் பெற்றது. கும்பகோணத்தை சுற்றியுள்ள அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, திருவையாறு, ஆவூர், சுவாமிமலை ஆகிய ஊர்களில் பயிராகும் வெற்றிலையும் கும்பகோணம் வெற்றிலை என்றே அழைக்கப்படுகிறது.வெற்றிலை நட்டு வைத்த நாள் முதல் கடைசி வரை வெறும் இலை மட்டுமே வரும். பூ, காய், பழம், விதை எனஎதுவுமே வராது. 'வெறும் இலை' என அழைக்கப்பட்டு அதுவே
பின்னாளில் வெற்றிலை ஆனது. கரும்பச்சையாக இருப்பது ஆண் வெற்றிலை. இளம்பச்சையாக இருப்பது பெண் வெற்றிலை. வெற்றிலையில் 84.4 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது.


Source : Dinamalar

No comments:

Post a Comment