வடுகப்பட்டியில் விராலிமலை உழவர் மன்றத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விராலிமலை அருகேயுள்ள வடுகப்பட்டி ஊராட்சி சேவை மன்றத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் எஸ். சோமசுந்தரம் மன்றத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.
உழவர் மன்ற சிறப்பு குறித்து வேளாண் பொறியியல் செயற்பொறியாளர் எம். ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் கே. ஆர். மாசிலாமணி, வேளான் உதவி இயக்குநர் பெ. எட்வர்ட்சிங் ஆகியோர் பேசினர். உழவர் மன்றம், வங்கியின் பங்கு குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு இந்தியன் வங்கி மேலாளர் ஏ. பி. தேவபிரசாத் கிருபாகரன் பதிலளித்தார். நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை துணை அலுவலர் எம். ஜோசி, மன்றத் தலைவர் க. ராஜா,ரத்தினம், க. அன்பழகன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Source : Dinamani
No comments:
Post a Comment