Thursday, February 4, 2016

காளான் வளர்ப்பு பயிற்சி: பிப்.,6ல் ஈரோட்டில் துவக்கம்


கோபிசெட்டிபாளையம்: காளான் வளர்ப்பு குறித்த, இரண்டு நாள் பயிற்சி ஈரோட்டில் பிப்.,6ம் தேதி துவங்குகிறது. காளான் வளர்ப்பு மற்றும் காளானில் மதிப்பு கூட்டுதல் குறித்த இரு நாள் பயிற்சி பிப்., 6 முதல் 7 ம்தேதி வரை ஈரோட்டில் நடக்கிறது. மாவட்ட தொழில் மையம் பின்புறம் உள்ள ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தில் இப்பயிற்சி நடக்கிறது. காளான் வளர்ப்பு மற்றும் காளானில் மதிப்பு கூட்டுதல் பயிற்சியும் நடக்கிறது. பயிற்சியில் சான்றிதழ், செயல்முறை விளக்கம், கையேடு, மதிய உணவு வழங்கப்படும், என ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் தெரிவித்தார்.


Source : Dinamalar

No comments:

Post a Comment