Friday, February 5, 2016

9 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கலெக்டர் தகவல்



கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல் கொள்முதல் நிலையங்கள்

தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பு படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கம் மூலம் காவேரிப்பட்டணம், மலையாண்டஅள்ளி, பாரூர் என 3 இடங்களிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக பெரியமுத்தூர், மாதேப்பட்டி, பையூர், நெடுங்கல், போச்சம்பள்ளி, கால்வேஅள்ளி என 6 இடங்களிலும் என மொத்தம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது.

மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நெல் விற்பனை செய்ய தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பு படி நேரடி நெல் கொள்முதல் விற்பனை செய்து விவசாயிகள் பயன் பெறலாம். இந்த மையங்களில் விற்பனை செய்யும் ஏ கிரேடு குவிண்டாலுக்கு ஏற்கனவே ரூ.1,450 இருந்ததை தற்போது ரூ.70 கூடுதல் விலையில் குவிண்டாலுக்கு ரூ.1,520 என்ற விலையிலும், நெல் (பொது ரகம்) ஏற்கனவே ரூ.1,410 இருந்ததை தற்போது ரூ.50 கூடுதல் விலையில் குவிண்டாலுக்கு ரூ.1,460 என்ற விலையில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

பயன் பெறலாம்

நீண்ட தூரம் சென்று விற்பனை செய்யும் நிலை மாறி தற்போது நமது மாவட்டத்திலேயே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. விவசாயிகள் நெல் ரகங்களை விற்பனை செய்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார். 

Source : Dailythanthi

No comments:

Post a Comment