நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்கள் மற்றும் மூலிகைகளில் இருந்து எளிய முறையில் மருத்துவத்தை தயார் செய்து நமது உடல் நலத்தை பேணலாம். பிரிக்ளி பியர் காக்டஸ் என்கிற தாவர பெயரை கொண்ட சப்பாத்தி கள்ளிக்கு பாதாள மூளி என்ற பெயரும் உள்ளது. சப்பாத்தி கள்ளி எந்த பகுதியிலும் எளிதிலும் வளரக் கூடிய தாவரமாகும். பாலை நிலங்களில் கூட நீண்ட காலத்திற்கு தாக்கு பிடிக்கும் தாவரமாக இது காணப்படுகிறது.
பார்ப்பதற்கு முட்கள் நிறைந்த தாவரமாக காணப்பட்ட போதிலும், இது அரிய மருத்துவ குணங்களை கொண்டதாக விளங்குகிறது. சப்பாத்தி கள்ளி மிகுந்த சத்தூட்டம் கொண்ட உணவாக பயன்படுகிறது. மெக்சிகோ நாட்டில் அதிகம் விளையும் இதை பொடி செய்து டப்பாக்களில் அடைத்து ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் இது மருந்தாகிறது. சப்பாத்தி கள்ளியின் வேர் பகுதியை பயன்படுத்தி விஷமுறிவுக்கான மருந்து ஒன்றை நாம் இப்போது தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் சப்பாத்தி கள்ளியின் வேர் பகுதி. முட்கள் காணப்படும் என்பதால் இதை கவனமாக பிரித்து நீரில் விட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனுடன் சிறிது அளவு மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு டம்ளர் அளவுக்கு நீர் சேர்க்க வேண்டும்.
நன்றாக கொதிக்க வைத்து பின்னர் இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து தினமும் ஒன்று அல்லது இரண்டு வேளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொள்வதன் மூலம் பூச்சி கடி, வண்டு கடி, பூரான் கடி போன்ற சமயங்களில் சப்பாத்திகள்ளி விஷமுறிவு மருந்தாக பயன் தருகிறது. அது மட்டுமின்றி சில மூலிகைகளால் ஏற்படும் விஷத்தன்மையை போக்கும் குணமும் சப்பாத்தி கள்ளியின் வேருக்கு உள்ளது. அதே போல் சப்பாத்தி கள்ளியின் இலைகளை பயன்படுத்தி விஷக்கடிக்கான மேற்பூச்சு மருந்தை தயார் செய்யலாம்.
தேள் கடி, தேனீக்கடி, குளவிக்கடி போன்ற நேரங்களில், சப்பாத்தி கள்ளியின் இலைகளில் உள்ள முட்களை அகற்றி விட்டு நன்றாக நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இது சற்று கொழகொழப்பான தன்மையுடன் காணப்படும். இதனுடன் ஒரு துளி சிறிது சுண்ணாம்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இதை விஷக்கடி பட்ட கடிவாயில் பூச வேண்டும். இதை அப்படியே ஒரு பற்று போல் போட்டு கட்ட வேண்டும். இவ்வாறு செய்வதால் கடியால் ஏற்பட்ட வலி, வீக்கம், சிவப்புத்தன்மை போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.
சப்பாத்தி கள்ளியின் இலைகளில் உள்ள முட்களை அகற்றி விட்டு நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதை 10 துண்டுகள், 5 மிளகை பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து தேநீராக தயாரித்துக் கொள்ள வேண்டும். இதை வடிகட்டி பருகுவதன் மூலம் வெயில் காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை, களைப்பை, தாகத்தை போக்கக் கூடிய அற்புதமான உணவாக சப்பாத்தி கள்ளி விளங்குகிறது.
Source : Dinakaran

No comments:
Post a Comment