Tuesday, March 8, 2016

குன்மம் போக்கும் சீரகம்

You can explore its usefulness with the name of cumin said. Local ordinances. A store inventory will help to keep the body stable. We're using the day for gastronomy.



சீரகம் என்ற பெயரை சொன்னவுடன் அதன் பயனை தெரிந்து கொள்ளலாம். சீர் அகம். உடலை சீராக வைத்திருக்க உதவிடும் ஒரு கடை சரக்கு. நாள்தோறும் சமயலுக்கு நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அது ஒரு மூலிகை என்பதே பலருக்கு தெரிவதில்லை. குன்மம் போக்குதல், வயிறு வாயு அகற்றுதல், காசத்தை குணமாகுதல், செரிமானத்தை அதிகரித்தல், காமாலை போகுதல், சிறு நீரை பெருக்குதல், திசுக்களை இறுக செய்தல் மாதவிடாய் தூண்டுதல், மார்புவலி, கண்நோய் போக்குதல் உள்ளிட்ட நோய்களை போக்கம் குணங்களை கொண்டது.

இதில் சீரகம், கருஞ்சீரகம், காட்டுசீரகம், பெருஞ்சீரகம் என பலவகைகள் உண்டு. தமிழகத்தின் வளமான பகுதிகளில் வளர்கிறது. சீரகத்தை நாட்டுசர்க்கரையுடன் கலந்து நாள்தோறும் விடாமல் சாப்பிட்டுவந்தால் தேகம் வன்மை பெறும். 34 கிராம் சீரகத்தை 1400 மிலி நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி சீரகம் வெடித்து பதத்தில் வடித்து கொள்ளவும். இதை தலையில் தேய்த்து மூழ்கிவர கண்நோய், மயக்கம், வாந்தி, தலைவலி, மந்தம் முதலியவை நீங்கும். 

சீரகதிதை நிழலில் காயவைத்து பொடித்து தேன் அல்லது பாலில் காலை மாலை சப்பிட பித்தம், வாயு, சீதக்கழிச்சல், செரியாக்கழிச்சல் நீங்ககும். சீரகத்தூளுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட இருமல் நோய் விலகும். சீரகம் 200 கிராம் உலர்ந்த கற்றாழை 170 கிராம் பனை வெல்லம் 170 கிராம் எடுத்து பசும்பால் நெய் தேவையான அளவு சேர்த்து கிண்டி சாப்பிட நீர்ச்சுருக்கு, எரிவு, வெப்பம், அஜீரணம், கண்ணெரிவு, கைகால் உடல் எரிச்சல் ஆசனக்கடுப்பு, மலக்கட்டு நீங்கும். 

சீரகத்தை புடைத்து தூய்மையாக்கி 170 கிராம் எடுத்து கொள்ளவேண்டும்.  அதனுடன் ஏலம், சுக்கு, திப்பிலி, மிளகு, கோட்டம், நெல்லிமுள்ளி, நெற்பொரி, வில்வப்பழதோடு இவைகளின் பொடி வகைக்கு 8 கிராம் சேர்த்து அதனை ஒன்றாக கலந்து அதன் அளவுக்கு சர்க்கரை சேர்த்து 4 கிராம் முதல் 8 கிராம் வரை காலை மாலை இருவேளையும் சாப்பிட்டால் வயிற்றுவலி, வாயுநோய், ஈரல்நோய், காசம், கல்லடைப்பு, இரைப்பு, கம்மல் வலிநோய்கள் நீங்கும்.

தூய்மை செய்யப்பட்ட சீரகம் 250 கிராம் எடுத்து அது மூழ்கும் அளவு எழுமிச்சை சாறு, நெல்லிச்சாறு, இஞ்சிசாற்றில் தனித்தனியாக மும்மூன்று முறை ஊறவைத்து பின்பு அதை நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொள்ளவேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி வீதம் காலை மாலை சாப்பிட்டுவர செரியாமை, சுவையின்மை, பித்தமயக்கம், கண்ணெரிச்சல், வயிற்றுவலி, மூலக்கொதிப்பு, சீதக்கழிச்சல் நீங்கும். உடல் சூடு தணியும். 

சீரகத்தை கையாந்தகரைச்சாற்றில் ஊறப்போட்டு சூரணம் செய்து 4 கிராம் பொடியுடன் சர்க்கரை, சுக்கு தலா 2 கிராம் சேர்த்து மூன்றையும் ஒன்றாக கலந்து காலை மாலை சாப்பிட காமாலை, வாயு, உட்கரம் தீரும். சீரகம், சுக்கு, ஏலம், நெல்லி முள்ளி பொடி ஒரு நிறயாய் எடுத்து அதில் பாதியளவு சர்க்கரை சேர்த்து மூன்றுவிரல் அளவு காலை மாலை சாப்பிட தீக்குற்றம் தணியும். சீரகத்தை பொடித்து வெண்ணெயில் வைத்து சாப்பிட எரிகுன்மம் என்ற வயிற்றுஎரிச்சல் நோய் நீங்கும். 

சீரகம், குறுந்தொட்டி வேர், ஓரெடை கூட்டிக்குடிநீர் செய்து மூன்று நாள் சாப்பிட குளிர்காய்ச்சல் நீங்கும். சீரகம் 51 கிராம் எடுத்து எழுமிச்சை பழச்சாற்றில் அரைத்து நல்ல வெல்லம் 17 கிராம் சேர்த்து பிசைந்து புதுச்சட்டியில் அப்பி 3 நாள் வெயிலில் காயவைத்து எடுத்து ஒரு சிட்டிகை அளவில் காலை மாலை 10 நாள் சாப்பிட வெட்டை, கைகால் குடைச்சல், எரிச்சல், குணமாகும். 

Source : Dinakaran

No comments:

Post a Comment