Monday, March 21, 2016

வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி


நாகப்பட்டினத்தில் வெள்ளாடு வளர்ப்பு தொடர்பாக இலவச ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை (மார்ச் 23) நடைபெற உள்ளது.
இதுகுறித்து நாகப்பட்டினம் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகப்பட்டினம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ, அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புதன்கிழமை காலை 10 மணியளவில் வெள்ளாடு வளர்ப்பு என்னும் தலைப்பில் இலவச ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
பயிற்சியில் வெள்ளாட்டினங்கள், இடத்தேர்வு, கொட்டகை அமைக்கும் முறை, தீவன பராமரிப்பு, நோய்த் தடுப்பு மற்றும் பண்ணை பொருளாதாரம் போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோர் நேரிலோ அல்லது 04364-247123 என்ற தொலைபேசி எண்ணிலோ, கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை அணுகலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Source : Dinamani

No comments:

Post a Comment