Monday, March 28, 2016

கோவையில் மஞ்சள் விலை குவின்டால் ரூ.10 ஆயிரத்தை தாண்டியது

கோவையில் நேற்று விற்பனையான மஞ்சள் விலை குவின்டால் ரூ.10 ஆயிரத்து 400ஐ தாண்டியதால் விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.கோவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று மாலை நடந்த மஞ்சள் ஏலத்தில் விரலி ரகம் 127 குவின்டாலும், கிழங்கு ரகம் 60 குவின்டாலும் என மொத்தம் 187   குவின்டால் விற்பனையானது. ரொட்டிக்கவுண்டனூர், தொண்டாமுத்தூர், சாமிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதை கோவை, பொள்ளாச்சி, பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். 

விலை விரலி மஞ்சள் குவின்டால் ரூ.8,666 முதல் ரூ.10,409 வரை விற்றது. இதன் சராசரி விலை ரூ.9,500. விற்பனை மதிப்பு ரூ.12 லட்சம். கிழங்கு மஞ்சள் குவின்டால் ரூ.8,060 முதல் ரூ.9,999 வரை விற்றது. இதன் சராசரி விலை ரூ.9,200. விற்பனை மதிப்பு ரூ.5.52 லட்சம். இரண்டு ரகமும் சேர்ந்து ரூ.17.52 லட்சத்திற்கு விற்றது. இது கடந்த ஏலத்தை காட்டிலும் ரூ.6.18 லட்சம் குறைவாகும். 

கடந்த வாரத்தை காட்டிலும் விரலி மஞ்சள் குவின்டாலுக்கு ரூ.300 குறைந்துள்ளது. கிழங்கு மஞ்சள் ரூ.400 அதிகரித்துள்ளது. எனினும் விரலி மஞ்சள் அதிகபட்ச விலை குவின்டால் ரூ.10 ஆயிரத்து 400ஐ தாண்டியும், கிழங்கு மஞ்சள் ரூ.10 ஆயிரத்தை தொட்டதாலும் விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.  

Source : dinakaran

No comments:

Post a Comment