
வயல்வெளி, சாலையோரங்களில் வளரக்கூடிய செடி அம்மான் பச்சரிசி. இது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. சிவப்பு அம்மான் பச்சரிசி என்ற வகையும் உள்ளது. சிவப்பு அம்மான் பச்சரிசி எளிதில் கிடைக்காது. எனவே, அம்மான் பச்சரிசி செடியை பயன்படுத்தலாம். இதன் பூக்கள், இலைகள், வேர், தண்டு என அனைத்து மருந்தாக பயன்படுகிறது.
அம்மான் பச்சரிசி செடியை பயன்படுத்தி அல்சர், குடல்புண், வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். அம்மான் பச்சரிசி செடியை அரைத்து சாறு எடுக்கவும். 10 முதல் 20 மில்லி வரை சாறு எடுத்துக் கொள்ளவும். இதில் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து, நீர்விட்டு கலக்கவும். இதை குடித்துவர சீதபேதி சரியாகும். வயிற்றுபோக்கு நின்றுபோகும். பால்வினை நோய்க்கு மருந்தாகிறது. அல்சர் குணமாகும்.
பல்வேறு நன்மைகளை கொண்ட அம்மான் பச்சரிசி செடி மருக்களை போக்கும் மருந்தாக பயன்படுகிறது. அம்மான் பச்சரிசி செடியின் காம்புகளை உடைத்தால் பால் போன்று வரும். இதை மருக்கள் மீது போடும்போது மருக்கள் இல்லாமல் போகும். சிவப்பு அம்மான் பச்சரிசியை பயன்படுத்தி அலர்ஜியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். அம்மான் பச்சரிசி செடியை சிறு துண்டுகளாக எடுத்துக்கொள்ளவும்.
இதனுடன் 5 அரிசி திப்பிலி சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்துவர அலர்ஜி சரியாகும். அலர்ஜியால் தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். கொத்துக்கொத்தாக பூக்களை பெற்றிருக்கும் சிவப்பு அம்மான் பச்சரிசி சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. ஒவ்வாமையை போக்கும் தன்மை கொண்டது. சிவப்பு அம்மான் பச்சரி செடியை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் தடிப்புகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
அம்மான் பச்சரி செடியின் விழுது எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது சீரகம் சேர்க்கவும். தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிக்கடி எடுக்கவும். அலர்ஜி ஏற்படும்போது இதை பயன்படுத்தலாம். இந்த தைலத்தை பூசுவாதால் தோல் வியாதிகள் சரியாகும். தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு குணமாகும். திடீரென அரிப்பு வந்து படைபோல் ஏற்படும் நோய்க்கு மருந்தாகிறது. பூச்சிக்கடியால் ஏற்படும் அரிப்பை குணமாக்கும்.
அம்மான் பச்சரிசி, சிவப்பு அம்மான் பச்சரிசி செடி ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியது. இந்த செடியில் இருந்து வரும் பாலை மேல்பூச்சாக பயன்படுத்துவதால் பால் உண்ணிகள் மறையும். மருக்கள் மாறிப்போகும். இதன் இலைகளை அரைத்து தயிர் சேர்த்து சாப்பிடுவதால் வெள்ளைப்போக்கு பிரச்னை தீரும். பேதி சரியாகும். தோல்நோய்களுக்கு அம்மான் பச்சரிசி செடி அற்புத மருந்தாக விளங்குகிறது. -
Source : Dinakaran
No comments:
Post a Comment