Monday, March 28, 2016

உளுந்து சாகுபடி செய்வது எப்படி?

நாகர்கோவில் வேளாண்மை இணை இயக்குநர் இளங்கோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் தற்போது உளுந்து சாகுபடி செய்ய ஏற்ற காலமாகும். உளுந்தில் ஏடிற்றி 3, ஏடிற்றி 4, ஏடிற்றி 5, வம்பன் 5 ஆகிய ரகங்கள் உள்ளன. ஹெக்டேருக்கு 20 கிலோ வீதம் பயிரிடலாம். பயிரிடும் போது ஒரு கிலோ விதைக்கு ட்ரைகோடெர்மாவிரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். 

பின்னர் ரைசோபியம் 3 பாக்கெட், பாஸ்போபாக்டீரியா கஞ்சி கலந்து ஒரு ஹெக்டேருக்கான விதையை நேர்த்தி செய்யவேண்டும். தொடர் பயிரிடும் முறையில் உகந்த மண் ஈரப்பதத்தில் நெற்பயிரின் அறுவடைக்கு 5 நாளில் இருந்து 10 நாட்களுக்கு முன்னரே விதைகளை விதைக்க வேண்டும். அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பகுதிகளில் நெற்பயிரை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் முன்னரே விதைகளை விதைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

source : Dinakaran

No comments:

Post a Comment