
தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நீண்ட நேரம் படிப்பதால், அவர்களுக்கு கண்களுக்கு சோர்வு, எரிச்சல், கண்ணில் அழுக்கு சேருதல் போன்ற நிலை ஏற்படும். உடலில் ஏற்படும் உஷ்ணம், கண்கள் எரிச்சலை போக்க கூடியதும், ஞாபகசக்தி தரவல்லதுமான கீரை பொன்னாங்கன்னிகீரை.
அதிக நேரம் படிப்பதால் கண்கள் சோர்வடையாமல் இருக்கவும், கண்களை பலப்படுத்த கூடியதுமான சிவப்பு பொன்னாங்கன்னி சூப் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சிவப்பு பொன்னாங்கன்னி கீரை, வெங்காயம், பூண்டு, மிளகுப்பொடி, உப்பு, நல்லெண்ணெய். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு பூண்டு துண்டுகளை போடவும். சிறிது சின்ன வெங்காயம், சிவப்பு பொன்னாங்கன்னி சேர்த்து வதக்கவும். தேவையான அளவு நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இதனுடன் சிறிது மிளகுப்பொடி சேர்த்து சாப்பிட்டால், கண் சோர்வு நீங்கும். நீண்ட நேரம் படிக்க ஏதுவாகிறது. பொன்னாங்கன்னி கீரையை சாப்பிட்டுவர உடல் நலம்பெறும். வெள்ளை பொன்னாங்கன்னி கீரையை பயன்படுத்தி பார்வையை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெள்ளை பொன்னாங்கன்னி கீரை, நெய். கீரையை நீர் விடாமல் அரைத்து சாறு எடுக்கவும். 50 மில்லி கீரை சாறு எடுத்தால், சம அளவு நெய் எடுத்து தைலமாக காய்ச்சவும்.
ஆற வைத்து எடுத்துக்கொள்ளவும். தினமும் அரை ஸ்பூன் அளவு குழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் கண்பார்வை பலப்படும். கண் எரிச்சல் குறையும்.வெள்ளை பொன்னாங்கன்னிக்கு நாட்டு பொன்னாங்கன்னி என்ற பெயரும் உண்டு. இது, வெள்ளை நிற பூக்களை கொண்டது. பொன்னாங்கன்னி உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. கண்களுக்கு கூர்மையை தருவதுடன், கண் நரம்புகளுக்கு பலம் தரும். உடலுக்கு தெம்பை கொடுக்கும்.
பள்ளி தேர்வு நெருங்கும் வேளையில் அதிக நேரம் படிப்பதால் சத்துள்ள உணவு தேவை. இதற்கு பொன்னாங்கன்னி பயன்படுகிறது. பொன்னாங்கன்னியை பயன்படுத்தி கண் எரிச்சலை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெள்ளை கரிசலாங்கன்னி, நல்லெண்ணெய், பொன்னாங்கன்னி கீரை. வெள்ளை கரிசாலங்கன்னி, பொன்னாங்கன்னி கீரையை நீர்விடாமல் அரைத்து எடுக்கவும்.
இதனுடன், 2 பங்கு நல்லெண்ணெய் விட்டு சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதை வடிக்கடி தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும். கண் சோர்வு நீங்கும். மூளைக்கு குளிர்ச்சி ஏற்பட்டு படிப்பு மனதில் பதியும். பொன்னாங்கன்னியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. தங்க சத்தை பெற்றுள்ள பொன்னாங்கன்னி கீரை உடலுக்கு பலம் தருவதுடன் வலி நிவாரணியாகிறது. உறுப்புகளை செயல்படுத்துவதாக அமைகிறது. மனச் சோர்வு, உடல் சோர்வை போக்கும் மருந்தாக பயன்படுகிறது.
Source : Dinakaran
No comments:
Post a Comment