Thursday, March 17, 2016

தொழு மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி


 கூடலூரில் நூற்றுக்கணக்கான தொழு மாடுகளுக்கு, கால்நடைத் துறையினரால் கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி இம்மாதம் 1 முதல் 21 வரை நடக்கிறது. நேற்று கூடலூர் பளியன்குடி புதுரோடு அருகே, கால்நடை டாக்டர் குணசேகரன் தலைமையில் நூற்றுக்கணக்கான தொழு மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கால்நடை மண்டல இணை இயக்குனர் வரதராஜன் கூறுகையில்,""மாவட்டத்தில் 97 ஆயிரத்து 18 மாடுகள் கணக்கெடுப்பில் உள்ளது. இதில் 10வது சுற்றாக இதுவரை 81 ஆயிரத்து 250 மாடுகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 4 நாட்களுக்குள் எஞ்சியுள்ள மாடுகளுக்கும் தடுப்பூசி போடப்படும். நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு, தடுப்பூசி போடுவதன் அவசியத்தை மாடு வளர்ப்போர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்'', என்றார். கால்நடை உதவி இயக்குனர்கள் சவுந்திரராஜன், கணபதிமாறன், கால்நடை ஆய்வாளர் சாந்தி, உதவியாளர் கருப்பையா கலந்து கொண்டனர்.

Source : Dinamalar

No comments:

Post a Comment