Friday, February 5, 2016

உத்தமபாளையம் பகுதிகளில் விவசாயிகளுக்கு பவர் ஸ்பிரே

உத்தமபாளையத்தில் விவசாயிகளுக்கு பவர் ஸ்பிரே விநியோகம் செய்யப்பட்டது. உத்தமபாளையம் வட்டாரத்தில் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான அளவில் பயிர் விவசாயம் நடக்கிறது. தேசிய உணவு பாதுகாப்பு குழுமம் திட்டத்தின் சார்பில் 50 சதவீத மானியத்தில் பவர் ஸ்பிரே வழங்கும் நிகழ்ச்சி  வேளாண்மை உதவி இயக்குநர் ராஜ்மனோகரன் தலைமையில் நடந்தது. யூனியன் சேர்மன் தீபாவளிராஜ் 8 பவர் ஸ்பிரேயர்களை விவசாயிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் வேளா ண்மை அதிகாரிகள் சின்னவெளியப்பன், மணிகண்டன், பால்முத்து, குமரேசன், மோகன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Source : Dinakaran

No comments:

Post a Comment