புதுக்கோட்டை அருகே நபார்டு வங்கி, ரோஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் சுய உதவிக் குழு பெண் உறுப்பினர்களுக்கான குறுந்தொழில் முனைவோர் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
செல்லப்பா நகரில் உள்ள ரோஸ் தொண்டு நிறுவனத்தில் நடைபெற்ற சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை சென்னை நபார்டு வங்கிப் பொது மேலாளர் செல்லத்துரை தொடங்கிவைத்துப் பேசினார். தொடர்ந்து, நபார்டு மாவட்ட வளர்ச்சி அதிகாரி எஸ். சோமசுந்தரம் பேசினார்.
நிகழ்ச்சியில், நபார்டு உதவிப் பொது மேலாளர் மாத்யூ, புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் ஜி.எஸ். தனபதி, முதன்மைச் செயல் அலுவலர் அகிலா, பி.ஆர்.எம் நிறுவன இயக்குநர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரோஸ் நிறுவன இயக்குநர் ஏ. ஆதப்பன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் விஜயா நன்றி கூறினார்.
Source : Dinamani
No comments:
Post a Comment