முழு மானியத்துடன் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேளாண், தோட்டக்கலைத் துறைகள் மூலம் சிறு, குறு இதர விவசாயிகளுக்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துத் தரப்படுகிறது. இதில், சிறப்பினமாக ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு தனியாகப் பெறப்பட்டுள்ளது. இதில், 5 ஏக்கர் வரை நில உடைமை உள்ளவர்களுக்கு முழு மானியத்துடன் கூடிய சொட்டுநீர்ப் பாசனக் கருவிகளும், 5 ஏக்கருக்கு மேல் நில உடைமை உள்ளவர்களுக்கு மானியத்துடனும் கருவிகள் தோட்டக்கலை, வேளாண் துறைகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பயன்பெற விருப்பமுள்ளவர்கள் நில உடைமை குறித்த சிட்டா, அடங்கல், சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்று, குடும்ப அட்டை நகல், நிலவரைபடம் போன்ற சான்றிதழ்களுடன் வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலர்களை அணுகலாம். இத் திட்டத்தின்கீழ் 10 ஆண்டுகள் குத்தகைக்குப் பதிவு செய்து விவசாயம் செய்பவர்களும் பயன்பெறலாம்.
Source : Dinamani
No comments:
Post a Comment