Wednesday, February 3, 2016

மொட்டு காளான் வளர்ப்பு மாவட்ட கலெக்டர் ஆய்வு


கோத்தகிரியில், மொட்டு காளான் வளர்ப்பு மற்றும் கொய்மலர் சாகுபடியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்தின் சார்பில், வங்கிக்கடன் உதவியுடன், காளான் வளர்ப்பு மற்றும் கொய்மலர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கோத்தகிரி பாண்டியன் பார்க் பகுதியில், 40 லட்சம் மதிப்பில், 16 லட்சம் மானியத்துடன், கம்போஸ்ட் தயாரிப்புடன், காளான் வளர்ப்பு உற்பத்தி நடக்கிறது.
வங்கி கடன் உதவியுடன் கூடிய பின்னேற்பு மானியத்தில் பசுமை குடிலில் நடந்துவரும் காளான் வளர்ப்பு உற்பத்தியை, மாவட்ட கலெக்டர் சங்கர் பார்வையிட்டார்.

இதில், தோட்டக்கலை இணை இயக்குனர் மணி, உதவி தோட்டக்கலை இயக்குனர் உமாராணி, துணை இயக்குனர் சிவசுப்ரமணியன், கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் சித்ராபானு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source : Dinamalar

No comments:

Post a Comment