Wednesday, August 19, 2015

விவசாயிகள், மாணவிகளுக்கு உயிர் உரங்கள் தயாரிப்பு பயிற்சி



நீடாமங்கலம், : நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் ஊரக வேளாண்மை வளர்ச்சி வங்கி சார்பில் உயிர் உரங்கள் உற்பத்தி தொடர்பான 3 நாள் பயிற்சி வகுப்பு நடந்தது. திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி நிலைய பயிர்பாதுகாப்பு துறை பேராசிரியர்  சோழன் தலைமை வகித்தார். நீடாமங்கலம் அறிவியல் நிலைய தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் 12 பேர், நபார்டு குழுவை சேர்ந்த 30 விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். சோழன் பேசுகையி, வேளாண்மைக்கு உறுதுணை புரியும் உயிர் உரங்களையும், உயிரியல் நோய்க்கொல்லி மருந்துகளான சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி போன்றவற்றை பயன்படுத்துவதால் மண்வளம் கெடாமல் சுற்றுச்சூழல் மாசுபடாமல் நஞ்சில்லா தானியங்களை உற்பத்தி செய்ய முடியும் என்னறார். நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ரவிசங்கர், உதவிபேராசிரியர்கள் சிவக்குமார், ராஜாரமேஷ், கவிதாஸ்ரீ, சரவணன் ஆகியோர் உயிர் உரங்கள் உற்பத்தி மற்றும் பயன்கள் பற்றி பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. உதவி பேரசிரியர் காமராஜ் நன்றி கூறினார். 

Source:




No comments:

Post a Comment