Monday, August 31, 2015

விவசாயிகளுக்கு சின்ன வெங்காயம் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி


பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  விவசாயிகளுக்கு சின்ன வெங்காயம் சாகுபடி குறித்த தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் . இந்திரா.

பெரம்பலூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத் திட்டத்தில் 2015-16 ஆம் ஆண்டுக்கு சின்ன வெங்காயம் சாகுபடிக்கு 350 ஹெக்டேர் இலக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தில் பயனடைய அனைத்து வட்டாரங்களிலும் தேர்வு செய்யப்பட்ட 680 விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சி அளிக்க உத்தேசிக்கப்பட்டு விவசாயிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஆக. 31 மற்றும் செப். 2 ஆம் தேதிகளில் பெரம்பலூர் மற்றும் வேப்பூர் வட்டார விவசாயிகளுக்கு பெரம்பலூர் வட்டாரத்திலும், 3 ஆம் தேதி வேப்பந்தட்டை வட்டார விவசாயிகளுக்கு வேப்பந்தட்டை வட்டாரத்திலும் நடைபெற உள்ளது. எனவே, இந்த தொழில் பயிற்சி கூட்டங்களில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.

Source: 

http://www.dinamani.com/edition_trichy/perambalur/2015/08/29/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/article2999450.ece

No comments:

Post a Comment