Friday, August 21, 2015

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை: ஆட்சியர்


உரங்களை விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நிகழாண்டு மாவட்டத்தில் 3,75,250 ஏக்கர் பரப்பில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கு தேவையான யூரியா, டிஏபி, பொட்டாஷ், ரசாயன உரங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது யூரியா தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 3,100 மெட்ரிக் டன்னும், தனியார் உர விற்பனை நிலையங்களில் 2,900 மெட்ரிக் டன்னும் உள்ளது. டிஏபி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 2,400 மெட்ரிக் டன், தனியார் உர விற்பனை நிலையங்களில் 624 மெட்ரிக் டன் உள்ளது. பொட்டாஷ் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 745 மெட்ரிக் டன்னும், தனியார் உர விற்பனை நிலையங்களில் 890 மெட்ரிக் டன்னும் உள்ளது.
காம்ப்ளக்ஸ் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களிலும் சேர்த்து 450 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.
உரங்களை கூடுதல் விலைக்கு விற்கும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து புகார் தெரிவிக்க விரும்புவோர் 9750963314 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

source:

http://www.dinamani.com/edition_trichy/thiruvarur/2015/08/22/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/article2987358.ece

No comments:

Post a Comment