Thursday, August 27, 2015

திண்டுக்கல் மாவட்டத்தில் செப்.,1ல் கோமாரி தடுப்பூசி



திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் செப்.,1 முதல் கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
கலெக்டர் ஹரிஹரன் கூறியதாவது: கால், வாய் கோமாரி நோய் கலப்பின மாடுகளை அதிகம் தாக்குகிறது. இதனால் மாடு பால் உற்பத்தி, எருதுகளின் வேலை திறனும் குறைகிறது. சினைபிடிப்பு திறனும் பாதிக்கப்படுகிறது. இந்நோய் பாதித்த மாடுகளில் இருந்து காற்றின் மூலம் பரவுகிறது. நோய் பாதித்த மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணத்தை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். நோயை கட்டுப்படுத்த தேசிய கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் சார்பில் செப்., 1 முதல் செப்., 21 வரை 9 வது தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதில் மாநிலம் முழுவதும் 93 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
தடுப்பு மருந்துகளை பாதுகாப்பாக வைக்க குளிரூட்டும் அறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆக., 2 8 ல் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகின்றன.
தடுப்பூசி முகாம் குறித்து முன்னதாகவே அறிவிக்கப்படும். எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம், என்றார்.

Source: http://www.dinamalar.com/district_detail.asp?id=1328059

No comments:

Post a Comment