Tuesday, August 25, 2015

சம்பா பருவம் துவக்கம்: இயந்திரம் மூலம் நடவு செய்ய விவசாயிகள் ஆர்வம்


புதுச்சேரியில் சம்பா பருவம் துவங்கியுள்ள நிலையில்  இயந்திரம் மூலம் நடவு நடும் பணியினை விவசாயிகள் ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடி மாதம் பிறந்து 18-ம் தினத்தில் ஆடிப்பெருக்கு விழாவை விவசாயிகள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அன்றைய தினம் நிலத்தில் விதை விதைத்து, இயற்கை அன்னையை வழிபடுவர். இந்நிலையில் 19 நாள்களுக்குப் பிறகு சம்பா பருவம் துவங்கியதையொட்டி நெல் நாற்று நடவு பணி திங்கள்கிழமை துவங்கியது.
விவசாயத் தொழிலுக்கு ஆட்கள் கிடைப்பது அரிதான இக்காலக்கட்டத்தில் இயந்திரம் மூலம் நடவு செய்வதை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் வேளாண் துறையின் உழவர் உதவியகம் மூலம் இயந்திரத்தை குறைந்த வாடகையில் எடுத்து நாற்று நடும் பணியை துவக்கினார்கள்.
இயந்திரத்தை பயன்படுத்துவதால் நாற்று நடவு விரைவாக நடப்பதாகவும், அதிக மகசூல் கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இப்பணியினை காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் பார்வையிட்டனர்.
சோரப்பட்டு உழவர் உதவியகத்தில் 3 மாதம் தங்கும் இவர்கள் சுற்றுப் பகுதி கிராமங்களில் மேற்கொள்ளப்படும், வேளாண் பணிகளை கள ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு தங்களது படிப்பிற்கு பயனுள்ளதாக இருப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.
Source:

No comments:

Post a Comment