Tuesday, August 25, 2015

சிறந்த விவசாயிகளுக்கு விருது



மாவட்டம் மற்றும் வட்ட அளவிலான சிறந்த விவசாயிகள் விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி: பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக் கழகத்தின் சார்பில், ஆண்டுதோறும் மாவட்ட அளவில் சிறந்த விவசாயி, சிறந்த பெண் விவசாயி, வட்ட அளவில் சிறந்த இளம் விவசாயி, சிறந்த பெண் விவசாயி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நிகழாண்டு இறுதியில் நடக்கவிருக்கும் வேளாண் கண்காட்சியின் போது இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுக்கு, தகுதியான விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட இணை இயக்குநர், விவசாயத்துறை அலுவலகங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், பல்கலைக் கழகத்தின் இணைய தளம் இல் இருந்தும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை, செப். 30-ஆம் தேதிக்குள் பல்கலைக் கழக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, பல்கலைக் கழக விரிவாக்க இயக்குநரை 080-23418883 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளைப் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்
பொது கல்வித்துறையிடம் பள்ளிகளைப் பதிவு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, பொது கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி: 2015-16-ஆம் கல்வியாண்டில், பொது கல்வித்துறையின் நிரந்தர அங்கீகாரம் பெறாமல் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் இசை, நாட்டியம் மற்றும் நாட்டியப் பள்ளிகளைப் பதிவு செய்து கொள்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மைசூரு, பெங்களூரு மற்றும் பெலகாவி மண்டலங்களைச் சேர்ந்த பள்ளிகள், சம்பந்தப்பட்ட பொது கல்வித்துறை உதவி இயக்குநர்கள், கலபுர்கி மண்டலத்தைச் சேர்ந்த பள்ளிகள் கலபுர்கியில் உள்ள பொது கல்வித்துறை ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள, விண்ணப்பங்களை அக். 1-ஆம் தேதிக்குள் அளிக்கலாம்.
மேலும் விவரங்களுக்குஇணைய தளத்தில் அணுகவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Source:


No comments:

Post a Comment