அரியலூர் மாவட்ட வேளாண் துறை சார்பில், அரியலூர் வேளாண் உதவி இயக்குநர் மோகன் தலைமையில் விவசாயிகள் 50 பேர் சனிக்கிழமை நாகமங்கலம் காய்கனி தோட்டத்துக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
சுற்றுலாவின்போது, நெல் ரகங்களின் செயல்விளக்க திடல்கள், சொட்டுநீர் பாசன முறை மூலம் அமைக்கப்பட்ட தக்காளி வயல், கத்திரி வயல், வெண்டை வயல் ஆகியவற்றை விவசாயிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
மேலும், அங்கிருந்த மாங்காய், கொய்யா, நெல்லியின் வெவ்வேறு ரகங்களும், மலர் சாகுபடியில் கோழி கொண்டை பூ வயல், சம்பங்கி வயல், பிச்சி பூ வயல், ரோஜா பூ வயல் ஆகியவை விவசாயிகளை கவரும் விதத்தில் இருந்தது.
இந்த காய்கனி தோட்டமானது வேளாண்மை திட்டத்தின் கீழ் செயல்படக் கூடிய அட்மா திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்றாற்போல் ஒருங்கிணைந்த பண்ணை தோட்டமாக விளங்குகிறது.
பயிர்கள் சம்பந்தமாக விவசாயிகளுக்கு எழுந்த சந்தேகங்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் செயல்விளக்கம் அளித்தனர். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் வாசுகி, சுந்தரமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
source : Dinamani
No comments:
Post a Comment