“எட்டு வயதில் நான் முதன் முதலில் என் தந்தையுடன் வயலுக்கு சென்றேன். என் கைகளில் நெல் விதைகளை கொடுத்து, நாற்றங்காலில் தூவும்படி சொன்னார். மகிழ்ச்சியோடு தூவினேன். நான் தூவிய விதைகள் சில நாட்களில் நாற்றுகளாக வளர்ந்ததை பார்த்ததும், அதிசயித்தேன். அப்பா சொன்னபடி அவைகளை பிடுங்கி, உழுது தயாராக இருந்த நிலத்தில் நட்டுவைத்தேன். அவை வளர்ந்து கதிர்களாயின.
நெற்கதிர்களை அறுத்து, அறுவடையை தொடங்கிவைத்தேன். எட்டு வயதில் இருந்து– எனக்கு திருமணமாகும் வரை, நான் வயலில் இறங்கி விவசாய பணியை தொடங்கிவைத்த பின்புதான், வேலையாட்கள் இறங்கி வேலையை தொடர்வார்கள்.
விவசாயம் எனக்கு பிடித்துப்போனதால் அப்பாவோடு அடிக்கடி வயலுக்கு போவேன். அப்போது வயலில் கூலி ஆட்கள் வேலை செய்து கொண்டு இருந்தால், என்னையும் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யுமாறு அப்பா கூறுவார். நானும் உடனே வயலில் இறங்கி வேலைபார்ப்பேன். களைகளை கண்டால் உடனே பறித்துவிடுவேன்’’ என்று கூறும் பெண் விவசாயி பிரசன்னாவுக்கு, 24 வருடங்கள் கழித்து விவசாயம் புகழை அள்ளிக்கொடுத்திருக் கிறது. தனது 32 வயதில் பிரசன்னா பத்மநாபனாக முதல் அமைச்சர் ஜெயலலிதாவிடம் ‘வேளாண் அபிவிருத்தி விருது’ பெற்றிருக்கிறார். 2 கிலோ விதை நெல்லில் 3 ஆயிரத்து 223 கிலோ நெல் மணிகளை விளையவைத்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 5 லட்சம் ரூபாய் பரிசும் பெற்றுள்ளார்.
மதுரை திருப்பாலையில் கணவர் மற்றும் குழந்தைகளோடு (பால சம்யுக்தா, தீரஜ்மணி) வசித்துவரும் பிரசன்னா முதுகலை பட்டம் பெற்றவர். ஒருபுறம் வயிற்றுப் பசி தீர்க்கும் விவசாயியாக களம் இறங்கும் இவர், மறுபுறம் மாணவர்களின் அறிவுப் பசியை தீர்க்கும் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார்.

Source : Dailythanthi
No comments:
Post a Comment