Tuesday, March 8, 2016

சேத்துப்பட்டு வட்டார விவசாயிகள் கவனத்துக்கு...


சேத்துப்பட்டு வட்டத்தில் நெற்பயிரில் காணப்படும் புகையான் பூச்சி தாக்குதல், குலை நோய்த் தாக்குதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வேளாண்மை உதவி இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேத்துப்பட்டு வட்டம், சதுப்பேரி, நம்பேடு, தேவிமங்கலம் உள்பட பல்வேறு கிராமபுறங்களில் உள்ள விவசாயிகளின் நெற்பயிர்களில் புகையான் பூச்சி தாக்குதல், குலை நோய்த் தாக்குதல் ஆகியவை பரவி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகையான் பூச்சி: நெல் பயிரிடப்பட்டுள்ள வயலில் யூரியா உரம் இடுவதை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், வயலில் 8 அடிக்கு ஒரு அடி பட்டம் இட்டு பிரித்து, நெற்பயிரின் அடிப்பகுதியில் சூரிய ஒளிபடும்படி செய்ய வேண்டும்.
நெல் வயலில் உள்ள தண்ணீரை முற்றிலுமாக வடித்து, பைமெட்ரோசைன் - 120 கிராம் அல்லது அசிபெட்-500 கிராம் அல்லது டிரையசோபாஸ் 500 மில்லி லிட்டர் கொண்டு விசைத் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேலும், நோய்த் தாக்குதல் தொடர்ந்தால், 15 நாள்கள் இடைவெளியில் மீண்டும் பூச்சி மருந்து தெளிக்க வேண்டும்.
குலை நோய்: டீரைசைக்ளசோல் - 500 கிராம் அல்லது கார்பண்டசிம் - 500 கிராம், 60 லி தண்ணீரில் கலந்து விசைத் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேலும், இதுதொடர்பான சந்தேகங்களுக்கு அந்தந்த வேளாண்மை உதவி அலுவலர்களை அணுகலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

source : Dinamani

No comments:

Post a Comment