Sunday, February 7, 2016

நபார்டு வங்கி மூலம் விவசாயிகள் ஒருங்கிணைப்பு கம்பெனிச் சட்டத்தின் கீழ் பதிவு


மதுரை மாவட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கம்பெனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன்மூலம் விவசாயிகள் சுயமாக பொருட்களை விற்கவும், இடுபொருட்களை வாங்கவும் முடியும்.
நபார்டு திட்டத்தின் கீழ் தாலுகாக்களில் உள்ள விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் ஒருங்கிணைக்கப்பட்டு உழவர் மன்றங்கள் அமைக்கப்படுகின்றன. மன்றத்திற்கு 20 விவசாயிகள் வீதம் மதுரையில் 400 மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக மன்ற விவசாயிகள் ஒருங்கிணைக்கப்பட்டு 10 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் 500 விவசாயிகள் உள்ளனர். இரண்டு நிறுவனங்கள் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவும் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர் மகேஷ் கூறியதாவது டி.கல்லுப்பட்டி, பேரையூரில் உள்ள நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு அதிலுள்ள உறுப்பினர்கள் தலா ரூ.1000 முதலீடு செய்வர். 500 உறுப்பினர்கள் இருந்தால் ரூ.5 லட்சம் வசூலாகும்.

இதற்கு ஈடான தொகை மத்திய அரசால் நிறுவனத்திற்கு வழங்கப்படும். இதைக் கொண்டு உரக்கடை அமைக்கலாம். மொத்தமாக தரமான உரம் வாங்கி தேவைக்கேற்ப விவசாயிகளுக்கு வழங்கலாம். விவசாயக் கடன் வழங்கலாம். விவசாயிகளே விலையை நிர்ணயம் செய்து வியாபாரிகளுக்கு நல்ல விலைக்கு விற்கலாம். தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு நபார்டு வங்கி நிதியுதவி செய்யும், என்றார்.

Source : dinamalar

No comments:

Post a Comment