வாலாஜாபாத்;அட்மா திட்டம் சார்பில், வேளாண் கழிவு பொருட்களில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல் குறித்து, தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.வாலாஜாபாத் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், நேற்று காலை, 11:00 மணி அளவில் நடந்த, வேளாண் கழிவு பொருட்களிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பயிற்சி முகாமிற்கு, வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஜி.லதாபானுமதி தலைமை தாங்கினார். அட்மா தொழில்நுட்ப மேலாளர் எஸ்.கலியபெருமாள் முன்னிலை வகித்தார்.
காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மைய உதவி பேராசிரியர் பி.முருகன், வேளாண் கழிவு பொருட்கள், தென்னை நார் மற்றும் கரும்பு சோகை ஆகியவற்றிலிருந்து, இயற்கை உரம் தயாரிப்பது மற்றும் மக்கும் குப்பையில் மண் புழு உரம் தயாரிப்பது குறித்து, விவசாயிகளிடையே விளக்கி பேசினார். பயிற்சி முகாமில், வாலாஜாபாத் வட்டாரத்தைச் சேர்ந்த, 40 விவசாயிகள் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Source : Dinamalar
No comments:
Post a Comment