Friday, February 5, 2016

17வது மலர், காய்கனி கண்காட்சி துவக்கம்

காரைக்காலில் 17வது மலர், காய் மற்றும் கனி கண்காட்சி துவங்கியது. காரைக்கால் நகராட்சி திடலில் மாவட்ட வேளாண்துறை சார்பில் 17வது மலர், காய் மற்றும் கனி கண்காட்சி நேற்று இரவு துவங்கியது. கண்காட்சியை புதுச்சேரி வேளாண் அமைச்சர் சந்திரகாசு துவக்கி வைத்தார். புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் சிவா, எம்எல்ஏ நாஜிம், கலெக்டர் வல்லவன் ஆகியோர் வாழ்த்தினர். மாவட்ட கூடுதல் வேளாண்துறை இயக்குனர் மதியழகன் வரவேற்றார். விழாவில் வாரிய தலைவர்கள் கோவிந்தராஜ், உதயகுமார், மாவட்ட வணிகர்கள் சங்க தலைவர் அமுதா ஆறுமுகம் மற்றும் பலர் பங்கேற்றனர். இணை வேளாண் இயக்குநர் ராஜேந்திரன் நன்றி கூறினார். இந்த கண்காட்சி வரும் 7ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சிக்காக புதுச்சேரி அரசு ரூ.25 லட்சம், தனியார் துறை பங்களிப்பு ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் பெங்களூரு, புனே, ஐதராபாத், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வண்ண, வண்ண மலர்கள், அங்காரம் மற்றும் காய்கறி செடிகள், பழங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரயில், காளாண் குடை, அழகிய பெண் பொம்மை, மாட்டுவண்டி, நீரோடை, வண்ணத்துப்பூச்சி, மீன் உள்ளிட்டவைகளை மக்கள் ரசித்து பார்வையிட்டர். விழாவின் இறுதி நாளான நாளை பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களூக்கு  பரிசு வழங்கப்படவுள்ளது.

Source : Dinakaran

No comments:

Post a Comment