Sunday, April 3, 2016

கணிணியை விட‌ நெல் மணியே சிறப்பு என‌ விவசாயத்தில் ஈடுபடும் கணிணிதுறை பட்டதாரி இளம்பெண்



ராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை அருகே தந்தைக்கு உதவியாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டுவரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் தங்கபதக்கம் பெற்ற‌ பட்டதாரி பெண் வித்யா, வேளாண் இயந்திரங்கள் இயக்குவதிலும் சாதனை படைத்துவருகிறார்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியைச் சேர்ந்த  விவசாயி ஆதித்தன். எருதுகட்டு விழா பேரவைத் தலைவராக உள்ளார். இவரது மனைவி காளிமுத்து. காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவராக உள்ளார். இவர்களது கடைசி மகள் வித்யா, 24. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் இன்ஜினியரிங் கல்லூரியில் எம்.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் தங்கபதக்கம் பெற்றுள்ளார்.

தற்போது தந்தைக்கு உதவியாக விவசாயப் பணிகளில் ஈடுபடுகிறார்.  அதில் ஒரு பகுதியாக டிராக்டரில் கலப்பை இணைத்து உழவு செய்தல், நாற்று நடுதல், களை பறித்தல், உரம் இடுதல், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், அறுவடை செய்தல், கதிர் அடித்தல் உள்ளிட்ட விவசாயப் பணிகளில் ஈடுபட்டி வருகிறார். டிராக்டர், கதிர் அடிக்கும் இயந்திரம் உள்ளிட்ட கடினமான வேளாண் கருவிகள் இயக்குவதிலும் ஈடுபட்டு ஆச்சரியபடுத்துகிறார்.

வித்யா கூறுகையில், நாங்கள் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் விவசாயப் பணிகளில் ஆர்வம் செலுத்தி வருகிறேன். அப்பாவுக்கு உதவியாக உழவு செய்தல், களை பறித்தல், அறுவடை செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். டிராக்டர் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை இயக்குவதை பெருமையாக கருதுகிறேன். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். படித்து முடித்த பின் வேலை, திருமணம் என்ற பந்தத்தை தாண்டி பெண்கள் சுயதொழில்களில் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார்.

source : dinakaran

No comments:

Post a Comment