தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கண்டுபிடிப்பான 'திசு' வாழையை, சாகுபடி செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாரம்பரிய வாழை ரகங்களான பூவன், ரஸ்தாளி, தேன் வாழை ஆகியவற்றுக்கு இணையாக புதிய ரகமான திசு வாழையை, விவசாயிகள் ஆர்வத்துடன் பயிர் செய்கின்றனர். திசு வாழை என்பது 'சோதனை குழாய்' குழந்தை என்பது போல், நல்ல வீரியமுள்ள அதிக லாபம் தரக்கூடிய வாழை ரகங்களில் இருந்து எடுக்கப்படும். விதைகளை பக்குவப்படுத்தி, அதற்கு குறைந்த தண்ணீரிலும், பூச்சிகள் தாக்குதலில் நின்று வளரவும், தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கொடுக்கப்பட்டு, சிறிய பாலிதீன் பைகளில் வளர்க்கப்படும் வாழை கன்றுகளே திசு வாழை ரகமாகும். இந்த ரக வாழைகன்றுகளை, சேலம் புத்தூர் அக்ரஹாரம் பகுதியில், பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுள்ள சாமந்தி செடிகளுக்கு நடுவே தற்போது பயிரிட்டு வருகின்றனர். திசு வாழை இரண்டு மாதங்களில் பலன் தர துவங்கி விடும். மற்ற ரகங்களை விட, ஒரு தாரில், 200 பழங்களுக்கு குறையாமல் காய்க்கும் என்பதால், இந்த திசு வாழையை இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர்.
source : dinamalar
No comments:
Post a Comment