நெல் பயிரிடாத விவசாயிகள், கோடை உழவு முறையை மேற்கொண்டு பயன் பெறலாம்' என, வேளாண் துணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
வேளாண் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் பத்மாவதி கூறியதாவது:சொர்ணவாரி பட்டத்தில், பெரும்பாலான விவசாயிகள் நெல் பயிரிடுவது இல்லை. நெல் பயிரிட விரும்பாத விவசாயிகள், தங்களின் நிலங்களில், கோடை உழவு முறையை மேற்கொள்ளலாம். இந்த உழவு மூலமாக, இயற்கையாக பல நன்மைகளை பெறலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோடை உழவின் நன்மைகள்
* கோடை உழவு செய்வதால், மழை வரும் போது, நிலத்தில் மழை நீர் தேங்கி நிற்கும்
* புல், பூண்டு ஆகியவை வளர்வது தடுக்கப்படும்
* நிலத்தில் இருக்கும் பூச்சி முட்டைகள் மற்றும் கூட்டுப்புழுக்கள் தடுக்கப்படும்
* இயற்கை மண் வளம் பெருகும்.
source : dinamalar
No comments:
Post a Comment