Tuesday, April 5, 2016

ஒரு செடியில் இரு வண்ண மலர்கள்


கூடலுார் சாலை ஓரத்தில், ஒரே செடியில், இரு வண்ணங்களில், பூத்துள்ள மலர்கள், சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
கூடலுார் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் பகுதிகளில், கோடை வறட்சியில், காடுகளிலும், சாலை ஓரங்களில், இயற்கையாக பூக்கும் மலர்கள், சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதில், சில பூக்கள், பார்பவர்கள் மனதை மயக்க செய்கிறது.தற்போது, கூடலுார் மரப்பாலம் பகுதியில், சாலை ஓரத்தில் ஒரே செடியில், மல்லிகை பூ போன்ற வடிவில், இரு வண்ணங்களில், கொத்து கொத்தாய் பூக்கள் பூத்துள்ளன. இந்த பூக்கள், உள்ளூர் மக்களை மட்டுமின்றி, அவ்வழியாக செல்லும் கேரளா உள்ளிட்ட, வெளி மாநில சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

source : dinamalar

No comments:

Post a Comment