இயற்கையாக மண் வளம் பெருக கோடை உழவு முறையை விவசாயிகள் மேற்கொள்வது அவசியம் என்று விவசாயத் துறை அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து வேளாண் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குநர் பத்மாவதி கூறியதாவது:
சொர்ணவாரி பட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் நெல் பயிரிடுவது இல்லை. அவ்வாறு விரும்பாத விவசாயிகள், தங்களின் நிலங்களில் கோடை உழவு முறையை மேற்கொள்ளலாம். இந்த உழவின் மூலம் நிலம் இயற்கையாக பல நன்மைகளைப் பெறுகிறது. குறிப்பாக, மழை பெய்யும்போது நிலத்தில் தேங்கும். அதனால் புல், பூண்டு போன்ற தாவரங்கள் முளைத்து வளர்வது தடுக்கப்படும். நிலத்தில் இருக்கும் பூச்சி முட்டைகள், கூட்டுப் புழுக்கள் ஆகியவையும் தடுக்கப்படும். இயற்கையாகவே மண்ணின் வளம் பெருகும்.
Source : Dinamani
No comments:
Post a Comment