Tuesday, April 5, 2016

நாட்டுக்கோழி வளர்ப்பு அதிகரிப்பு


பெரியகுளம் பகுதியில் நவதானிய விவசாய பரப்பு அதிகரித்துள்ளதால் நாட்டுக்கோழி வளர்ப்பு அதிகரித்து வருகிறது.
பெரியகுளம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் மானாவரி நிலங்களில் கம்பு, சோளம், சாமை, குதிரைவாலி உட்பட பலவகையான நவதானிங்களை பயிர் செய்யப்படுகிறது.
தற்போது நவதானியம் பயன்பாடு வரவேற்பு பெற்றுள்ளது. விவசாயிகள், விவசாயத்துடன் நாட்டுகோழி வளர்ப்பை இணைத்தொழிலாக செய்து வருகின்றனர். தாமரைக்குளம், டி.கள்ளிப்பட்டி, கைலாசபட்டி, சருத்துப்பட்டி உட்பட பல உட்கடை கிராமப்பகுதிகளில் நாட்டுக்கோழி அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகிறது. இங்கிருந்து நாட்டுக்கோழிகள் பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, கம்பம், போடி சந்தைகள் மற்றும் கோழி கடைகளில் விற்கப்பட்டு வருகிறது.

source : dinamalar

No comments:

Post a Comment