Friday, April 15, 2016

புத்துணர்வு கொடுக்கும் நன்னாரி வேர்

Rejuvenation for the body to be able to pay, you can learn about the benefits of cooling taravallatumana nannari root. Nannari root, powdered drug stores available in the country.


உடலுக்கு புத்துணர்வு கொடுக்க கூடியதும், குளிர்ச்சி தரவல்லதுமான நன்னாரி வேரின் நன்மைகள் பற்றி அறியலாம்.   நன்னாரி வேர், பொடி ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மூலிகையான இது, ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. உள் உறுப்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. வயிற்றுபோக்கை தணிக்கவல்லது. உஷ்ண நோய்களை போக்குகிறது.

நன்னாரி சர்பத் தயாரிக்கும் முறை குறித்து பார்க்கலாம். நன்னாரி பொடியை இரவில் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்துக்கொள்ளவும். இதில் நன்னாரி ஊறவைத்த தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த சர்பத்தை ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைக்கவும். 

இதை 30 மில்லி அளவுக்கு எடுத்து 150 மில்லி தண்ணீர் சேர்த்து குடித்துவர சிறுநீர் எரிச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்று கடுப்பு சரியாகும். வெள்ளைபோக்கு பிரச்னை குணமாகும். மூட்டுவலியை போக்க கூடியது. நன்னாரி சர்பத் 2 ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் சாத்துக்குடி அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்துவர வெயிலினால் ஏற்படும் உஷ்ணம் குறையும். பித்தத்தை குறைக்கும் நன்னாரியை பயன்படுத்தி மலச்சிக்கலுக்கான மருந்து தயாரிக்கலாம். 

அரை ஸ்பூன் நன்னாரி வேர் பொடியுடன், 20 உலர்ந்த திராட்சை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி இரவு நேரத்தில் குடித்துவர மலச்சிக்கல் சரியாகும். கோடைகாலத்தில் அம்மை, சிறுநீர் எரிச்சல், ரத்த சீதபேதி போன்றவற்றை சரிசெய்யக் கூடிய தன்மை நன்னாரிக்கு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாகிறது. பெரியவர் முதல் குழந்தைகள் வரை பயன்படுத்தலாம். நன்னாரியை பயன்படுத்தி உடலுக்கு புத்துணர்வு தரும் பானம் தயாரிக்கலாம். 2 தேக்கரண்டி நன்னாரி சர்பத்தில், சிறிது உப்பு, சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும். 

தண்ணீர்விட்டு கலக்கி குடித்துவர உடலுக்கு உடனடியாக புத்துணர்வு கிடைக்கும். வெயிலினால் ஏற்படும் நீர் இழப்பை சமன்படுத்தும். காய்ச்சலை தணிக்கும் மருந்தாக நன்னாரி விளங்குகிறது. உற்சாகத்தை கொடுக்க கூடியது. மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது. உடல் வலியை போக்கும். நன்னாரி வேர் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. கோடைகாலத்தில் நன்னாரியை பயன்படுத்திவர வெப்பத்தினால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

source : dinakaran

No comments:

Post a Comment