உரம், பூச்சி கொல்லி மருந்துகளின் விலை உயர்வால் விளை நிலங்களுக்கு விவசாயிகள் ஆடு, மாடு சானங்களை பயன்படுத்தி இயற்கை உரத்தை பயன்படுத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை பயிரிடப்பட்டு வந்த நிலையில் தேயிலைக்கு உரிய விலை கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் மலைத்தோட்ட காய்கறி விவசாயத்திற்கு மாறினர். உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்ரூட், கேரட், நூல்கோல், காலிபிளவர், முட்டைகோஸ், மேராக்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்களை பயிரிட்டு வந்தனர். இந்நிலையில் உரம் விலை பன்மடங்கு உயர்ந்து வருவதால் ஆடு, மாடு சானங்களில் இருந்து இயற்கை உரம் தயாரித்து விளை நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் அதிகளவில் மகசூல் கிடைத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இடுபொருட்கள், பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் மருந்துகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழிலாளர்களின் சம்பளமும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். இதனால் ஒரளவிற்கு செலவை கட்டுப்படுத்த ஆடு, மாடு சானங்களின் மூலம் இயற்கை உரம் தயாரித்து விளை நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தி வருகிறோம். இதனால் களைகள் அதிகளவில் வந்தாலும் அதனை அவ்வப்போது அப்புறப்படுத்தி பராமரிக்கப்படுவதுடன் மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அனைத்து மானிய உதவிகளையும் தடையின்றி வழங்கினால் இத்தொழிலில் எவ்வித இடையூறுமின்றி மேற்கொள்ள இயலும் என கூறினார்.
source : dinakaran

No comments:
Post a Comment